search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 2 பேர் கைது
    X

    கோத்தகிரியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 2 பேர் கைது

    • கோத்தகிரி போலீசாருக்கு செம்மனாரை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரவேணு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 10 பேர் இறந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கள்ளச்சாராயம் விற்பனையை கண்காணித்து வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் அறிவுறுத்தலின்படி குன்னூர் டி.எஸ்.பி கோவிந்தசாமி தலைமையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கண்காணிப்பு பணி நடந்தது.

    அப்போது கோத்தகிரி போலீசாருக்கு செம்மனாரை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுமான் கான், யாதவ் கிருஷ்ணன், தலைமை போலீஸ் அஜித், போலீசார்கள் சரவணன், சுரேந்தர் அடங்கிய குழு செம்மனாரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் செம்மனாரை பகுதியில் வசித்து வரும் பெருமாள் (வயது45), பாலன் (71) ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பிளாஸ்டிக் கேனில் வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×