search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டரிடம் புகார் மனு"

    • பொம்மன்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்ட த்திற்கு வந்து மனு அளித்தனர்.
    • பஸ்வசதி கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள நல்லபொம்மன்பட்டியில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவி கள் தேவிநாயக்கன்பட்டி மற்றும் காசிபாளையம் பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்றே கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு காலை 8.30 மணிக்கு ஒரு அரசு பஸ் வருகிறது. அந்த பஸ்சில்தான் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். அதன் பிறகு பஸ் இல்லாததால் மாலை யில் பள்ளி முடிந்து 5 கி.மீ. தூரம் நடந்தே மாணவர்கள் வீட்டிற்கு வருகின்றனர். இதனால் 7 மணிக்கு வீட்டிற்கு வரும் மாணவ-மாணவிகள் அதன் பிறகு வீட்டுப்பாடம் கூட எழுத முடியாமல் சோர்வுடன் தூங்கி விடுகின்றனர்.

    கடந்த பல ஆண்டு களாகவே இதே சூழல் நிலவி வருகிறது. கொரோனா காலகட்டத்தில் கூட மினிபஸ் இயக்கப்பட்ட நிலையில் தற்போது காலையில் இயங்கும் ஒரே பஸ் மட்டுமே போக்குவரத்து சேவையாக உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் மாலையில் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனையடுத்து நல்ல பொம்மன்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்ட த்திற்கு வந்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

    பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல் இடையில் நின்று விடுகின்ற னர். பஸ் வசதி கேட்டு காந்திராஜன் எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி. ஆகி யோரிடமும் மனு அளித்து ள்ளோம். தற்போது மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு கொடு த்துள்ளோம். பஸ்வசதி கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

    • தள்ளுவண்டி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.
    • வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டு என கோரிக்கை மனுவை வழங்கினர்.

    தருமபுரி, 

    தருமபுரி நகராட்சி சொந்தமான முக்கியமான மக்கள் சந்திக்கும் பகுதிகளில் அதிகளவு தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர்.

    இவர்களிடம் நகராட்சி சார்பில் சுங்கவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட சிறு தள்ளுவண்டி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வைத்து செயல்பட்டு வருகின்றனர்.

    இவர்கள் முறையாக அரசு பதிவு பெற்ற சங்கம் ஆகும். மேலும் மத்திய, மாநில அரசுகளிடம் உரிமம் பெற்று முறையாக வரி செலுத்தி செயல்பட்டு வருகிறார்கள். இச்சங்கத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சாலையோரமாக வியாபாரம் செய்யும் தொழிலாளர்களும், தள்ளுவண்டி வைத்து வியாபாரம் செய்யும் தொழிலாளர்களும் இணைந்து தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் தருமபுரி நகராட்சி அதிகாரி ஒருவர் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலையோரம் வியாபாரம் செய்பவர்களிடம் சென்று பகிரங்கமாக மிரட்டி இந்த ரோடு தனியாருக்கு சொந்தமான இடம்.

    ஆகவே இந்த இடத்தில் நீங்கள் கடை வைக்க வேண்டுமென்றால் ஒரு தள்ளுவண்டிக்கு ரூ.1,000- வீதம் எனக்கு பணம் தரவேண்டும். இந்த பணம் உயரதிகாரிகள் வரை சென்று பிரித்து எடுத்துக்கொள்வார்கள் என்று கூறி பகிரங்கமாக பணம் தர சொல்லி மிரட்டி வருகிறார்.

    இல்லையென்றால் கடை வைக்க அனுமதி தரமுடியாது என்றும் மிரட்டுகிறார். ஆகவே கலெக்டர் எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்க நினைத்து எங்களிடம் பணம் கேட்டு மிரட்டும் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டு என கோரிக்கை மனுவை வழங்கினர்.

    • இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    • மனுக்களை பெற்றுக்கொ ண்டு விரைவில் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அங்கிருந்து கலெக்டர் சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், தொப்பையாறு அணையிலிருந்து தருமபுரி- சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் அணையிலிருந்து நீர் திறப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் சாந்தி தருமபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு பாசனத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து வைத்தனர்.

    பின்னர் அங்கிருந்து செக்காரப்பட்டி வழியாக மாவட்ட கலெக்டர் சாந்தியின் காரில் சென்றார்.

    அப்போது அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தங்கள் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் தண்ணீர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரால் தங்களால் மயானத்திற்கு மற்றும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    மேலும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சில கிராமங்களி லிருந்து காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்த ஆற்றை கடந்து வரும் நிலை உள்ளது. இப்பகுதியில் சிறிய பாலம் கட்டி தர வேண்டும். இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

    பின்னர் அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொ ண்டு விரைவில் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அங்கிருந்து கலெக்டர் சென்றனர். பின்னர் வந்த தருமபுரி பாமக எம்எல்ஏவிடமும் கிராம மக்கள் பாலம் அமைத்து தர வேண்டி புகார் தெரிவித்தனர்.

    ×