என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் சாந்தியிடம் பொதுமக்கள் மனு அளித்த போது எடுத்தபடம்.
மயானத்திற்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும்- கலெக்டரிடம் புகார் மனு
- இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
- மனுக்களை பெற்றுக்கொ ண்டு விரைவில் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அங்கிருந்து கலெக்டர் சென்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், தொப்பையாறு அணையிலிருந்து தருமபுரி- சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் அணையிலிருந்து நீர் திறப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் சாந்தி தருமபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு பாசனத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து செக்காரப்பட்டி வழியாக மாவட்ட கலெக்டர் சாந்தியின் காரில் சென்றார்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தங்கள் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது. மேலும் தண்ணீர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரால் தங்களால் மயானத்திற்கு மற்றும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
மேலும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சில கிராமங்களி லிருந்து காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் இந்த ஆற்றை கடந்து வரும் நிலை உள்ளது. இப்பகுதியில் சிறிய பாலம் கட்டி தர வேண்டும். இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
பின்னர் அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொ ண்டு விரைவில் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்து அங்கிருந்து கலெக்டர் சென்றனர். பின்னர் வந்த தருமபுரி பாமக எம்எல்ஏவிடமும் கிராம மக்கள் பாலம் அமைத்து தர வேண்டி புகார் தெரிவித்தனர்.






