search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்"

    • கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    பவானி:

    பவானியில் இருந்து ஈரோடு செல்லும் வழியில் சித்தோடு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் பால் நிறுவன அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் சார்பில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 விதம் உயர்த்தி அறிவித்திட கோரி கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பெருமாள், மாநில பொருளாளர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதனைத் தொடர்ந்து இதில் கலந்து கொண்ட வர்கள் தீவனங்கள், கால்நடைகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையிலும் தனியார் நிறுவனங்கள் ஆவினை விட கூடுதல் விலை கொடுப்பதால் ஆரம்ப சங்கங்கள் மூடுவதை தடுத்து நிறுத்தும் முறையில் பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்தி ஒரு லிட்டருக்கு பசும்பாலு க்கு ரூ. 45-ம், எருமை பாலுக்கு ரூ.54 என அறிவிக்க வேண்டும்.

    கொழுப்பு சத்து 5.9க்கு மேல் வராத நிலையில் அமைச்சர் கூடுதல் கொள்முதல் விலையை அறிவித்திருப்பது பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

    தமிழ்நாடு அரசு 1 லிட்டருக்கு ரூ.1 வீதம் ஊக்க தொகை அறிவித்தது வெறும் கண்துடைப்பு என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் கறவை மாடுகளுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×