search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருங்கல்"

    • டிரைவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அணஞ்சிகோடு பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.சம்பவத்தன்று ஆப்பி கோட்டிற்கு சென்றுவிட்டு சுமன் வீட்டிற்கு வரும்போது பருத்திவிளை சாஸ்தா கோவில் அருகே எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது.

    இதில் சுமன் பலத்த காயம் அடைந்தார். இதனைக் கண்டவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சுமன் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    • திருடிய நண்பர்கள் 2 பேர் கைது
    • திருட்டுபோன குத்துவிளக்கும் மீட்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள மாங்கரை கோட்டவிளையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43). கூலித்தொழிலாளி.

    இவரது நண்பர்கள் செல்வின் (40) மற்றும் மரிய சேவியர் (47). இருவரும் அடிக்கடி விஜயகுமார் வீட்டிற்கு வந்து செல்வார்கள். அவரது வீட்டில் சுமார் 7 கிலோ எடையுள்ள பிரமாண்ட வெண்கல குத்து விளக்கு உள்ளது.

    சம்பவத்தன்று விஜயகுமார் வீட்டிற்கு அவரது நண்பர்கள் செல்வின், மரிய சேவியர் இருவரும் வந்தனர். அவர்கள் சிறிது நேரம் வீட்டில் இருந்து விட்டு வெளியே சென்றனர். அதன்பிறகு விஜயகுமார் வீட்டின் உள் அறையில் பார்த்த போது அங்கிருந்த வெண்கல குத்துவிளக்கை காணவில்லை.

    மாயமான குத்து விளக்கின் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். எனவே அவர் இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதில் நண்பர்கள் இருவரும் வீட்டிற்கு வந்துவிட்டு சென்ற பின்னரே குத்து விளக்கு காணாமல் போனதாகவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் விஜயகுமார் வீட்டில் குத்துவிளக்கை திருடிச் சென்றது அவரது நண்பர் கள் என தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருட்டுபோன குத்துவிளக் கும் மீட்கப்பட்டது.

    • கருங்கல் போலீசில் புகார்
    • கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள நெடியவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தவசுமணி. இவரது மகன் லெனின் (வயது 43). இவர் கருங்கல் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலையில் கடைக்கு வியாபாரத்திற்கு சென்ற இவர் தனது மோட்டார் சைக்கிளை கடை அருகில் வைத்துள்ளார். இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளை பார்த்தபோது அதனை காணவில்லை. பைக்கை யாரோ திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து லெனின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவாகி உள்ள கைரேகைகளை ஆய்வு செய்தனர்.
    • கருங்கல் போலீசார் பணம் திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பெருமாங்குழியை சேர்ந்தவர் குளோறி (வயது 46). இவர் கருங்கல் பஸ் நிலையத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றார்.

    நேற்று இரவு இவர் வியாபாரம் முடிந்து தனது கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலையில் அவர் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    கடையினுள் சென்று பார்த்த போது அங்கு அவர் வைத்துவிட்டு சென்றிருந்த பணம் திருட்டு போயிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவர் இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்தார்.

    இப்புகாரின்பேரில் கருங்கல் போலீசார் ஆவின்பால் விற்பனை நிலைய பூட்டை உடைத்து பணம் திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் கடையில் பதிவாகி உள்ள கைரேகைகளை ஆய்வு செய்தனர்.

    • கருங்கல் அருகே கப்பியறை கருக்குப்பனை கூடல்விளையை சேர்ந்த கூலி தொழிலாளி தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
    • கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    கருங்கல் அருகே கப்பியறை கருக்குப்பனை கூடல்விளையை சேர்ந்தவர் கேசரி (வயது 56). இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த ஜாண் கிறிஸ்டோபர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.


    மாலையில் அவரது மனைவி பத்மாவிற்கு கேசரி தோட்டத்தில் இறந்து கிடப்பதாகவும், மரத்தில் இருந்து விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் அங்கு சென்று பார்த்த போது கேசரியின் தோள்ப ட்டையில் சிராய்ப்பு காயம் இருந்துள்ளது.


    இது குறித்து கேசரியின் மனைவி பத்மா கருங்கல் போலீசில் புகார் தெரிவித்தார். இப்புகாரி ன்பேரில் கருங்கல் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருங்கல் அருகே உள்ள பாலூர் கோவில்விளையை சேர்ந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பாலூர் கோவில்விளையை சேர்ந்தவர் உபால்டுராஜ் (வயது 52), தொழிலாளி.இவரது வீட்டின் முன் உள்ள 3 சென்ட் நிலத்தை இவரது அண்ணன் தெய்வசி காமணி இவருக்கு தருவதாக கூறியிருந்தாராம்.

    பின்னர் அதனை வேறொருவருக்கு விற்பனை செய்ததோடு இவரது வீட்டின் முன் காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளார். இதனால் மனமுடைந்த உபால்டுராஜ் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். இதனைக்கண்டவர்கள் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனி ன்றி நேற்று உபால்டுராஜ் பலியானார். இதுகுறித்து அவரது மனைவி ஹேமலதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "அல்போன்சியன் உடற்பயிற்சி கூடம்" திறப்பு விழா நடைபெற்றது.
    • அல்போன்சா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் இந்த உடற்பயிற்சி கூடம் நிறுவப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:


    சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "அல்போன்சியன் உடற்பயிற்சி கூடம்" திறப்பு விழா நடைபெற்றது.

    உடற்பயிற்சி கூடத்தைக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ் ஆசீர்வதித்துத் திறந்து வைத்ததோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.‌ சிறப்பு அழைப்பாளராக கர்னல் வினோத் தேவராஜ் கலந்து கொண்டார். அல்போன்சா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் சில பெரியோர்களின் உதவியுடன் இந்த உடற்பயிற்சி கூடம் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த உடற்பயிற்சி கூடம் அமைந்திட முழுமுதற் காரணமாக இருந்த புனித அல்போன்சா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எ‌பி. சீலன் அவர்களைக் கல்லூரி தாளாளர் பேரருட்தந்தை ஆன்றனி ஜோஸ், முதல்வர் முனைவர் எஸ். இசையாஸ், துணை முதல்வர் முனைவர் ஆர். சிவனேசன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் வாழ்த்தினர்.

    ×