search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல்காரர்கள்"

    • 150 டன் ரேசன் அரிசி பறிமுதல்; 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கடத்தல்காரர்களை கைது செய்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலமாக ரேசன் அரிசி கடத்தல் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தும் மாபியாக்கள் அதனை ஆலைகளிலும், வெளிமாநிலங்களிலும் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் கிராமப்புற மக்க ளுக்கு ரேசன் அரிசி, பொது விநியோக பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை.

    ரேசன் அரசி கடத்தலை தடுக்க மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்தாலும் கடத்தலை தடுக்க முடிய வில்லை.

    நாள்தோறும் மோட்டார் சைக்கிள், சரக்கு வேன், லாரிகளில் மூடை மூடை யாக ரேசன் அரிசிகள் கடத்தி அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    விருதுநகர், தென்காசி மாவட்ட சோதனை சாவடி களிலும் போலீசார் கண்டு கொள்ளாததால் கடத்தில் சம்பவங்கள் நடந்து வரு கின்றன.

    விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாதங்க ளில் 150 டன் கடத்தல் ரேசன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 170பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பெரும்பாலானோர் டிரைவர், கிளினீர்கள் மட்டும்தான். இதற்கு மூளையாக செயல்படும் கடத்தல்காரர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதன் காரணமாக கடத்தல்கள் அன்றாடம் நடந்து வருகின்றன.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு பொதுமக்களுக்காக குறைந்த விலையில் ரேசன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

    ஆனால் இவை பொது மக்களுக்கு சரியாக விநி யோகம் செய்யாமலும், எடையை குறைத்து விநியோ கிப்பதாலும் அதன் மூலம் பதுக்கப்படும் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. நகர் புறங்களில் ரேசன் அரிசிகள் பெரும்பாலான பொதுமக்கள் வாங்குவ தில்லை.

    ஆனால் அந்த ரேசன் கார்டுதாரர்கள் அரிசி வாங்கியதுபோல் பதிவு செய்து அதில் பதுக்கப்படும் அரிசிகள் ஆலைகளுக்கு கடத்தப்படுகிறது. தற்போது கோதுமை,பருப்பு, சீனி உள்ளிட்டவையும் கடத்தப்படுகிறது.

    கடத்தப்படும் ரேசன் அரிசி ஆலைகளில் பாலிஸ் செய்யப்பட்டு கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்து கொள்ளைலாபம் ஈட்டுகின்றனர். எனவே கடத்தல்காரர்களை கைது செய்து ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்றனர்.

    ×