search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா விற்பனை செய்த"

    • கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.
    • ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவித்தை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டேட் பேங்க் ரோடு கால்நடை மருத்துவமனை அருகே டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், ஏட்டு தியாகராஜன் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகம் படும்படி நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    இதையடுத்து போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பொட்டலம் வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்த ஜவித் (19) என்பதும், அவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜவித்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் பங்களாபுதூர் போலீசார் கே.என்.பாளையம், மோடூர் பிரிவு நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த நபர் ஒருவரிடம் சோதனையிட்டதில் அவரிடம் 700 கிராம கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    மேலும், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர், சத்தியமங்கலம், கே.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (27) என்பது தெரியவந்தது.

    மேலும், கர்நாடக மாநிலம், புளிஞ்சூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பங்களாபுதூர் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்த ரூ. 700 மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்

    ×