search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பாரி"

    • ஊழியர்கள் அங்கு வந்து, குடிநீர் குழாயை எந்தவித அறிவிப்பும் இன்றி சிமெண்ட் வைத்து அடைத்து விட்டனர்.
    • அதன் அருகாமையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை அடுத்த சுந்தர்ராம் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர். சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து, குடிநீர் குழாயை எந்தவித அறிவிப்பும் இன்றி சிமெண்ட் வைத்து அடைத்து விட்டனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூடப்பட்ட குடிநீர் குழாய் மீது வெள்ளை துணி போட்டு, மாலை அணிவித்து, அதன் அருகாமையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குன்னம் அருகே நல்லறிக்கை கிராம பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர்
    • 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடும்பாவி அமைத்து ஒப்பாரி வைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே நல்லறிக்கை கிராம பெண்கள் மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் கிராம பெண்கள் ஒன்றுகூடி கொடும்பாவி அமைத்து மழை வேண்டி ஒப்பாரி வைத்தனர். இதேபோல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கொடும்பாவி அமைத்து ஒப்பாரி வைத்து வேண்டுதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×