search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒட்டன்சத்திரம் விபத்து"

    ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் குளத்து புதூரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 60) விவசாயி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாராபுரம்- கள்ளிமந்தயம் பைபாஸ் ரோட்டில் திருமலை கவுண்டன் வலசு அம்மன் கோவில் வளைவு அருகே சென்ற போது தண்டபாணி மீது பின்னால் வந்த கார் மோதியது. 

    இதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் கள்ளிமந்தையம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பூரைச் சேர்ந்த கார் டிரைவர் செந்தில் குமார் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார். 

    தாராபுரம்- ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அதிவேகமாக செல்லும் வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே டீக்கடைக்குள் கார் புகுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கொசவப்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (வயது29). இவர் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் டீக்கடை வைத்துள்ளார்.

    நேற்று ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்பு சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது.

    அங்கு டீக்குடித்துக் கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த அய்யாவு மற்றும் சின்னான் ஆகியோர் மீது கார் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொல்லிமலை வாலவஞ்சிநாட்டை சேர்ந்த கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே டயர்வெடித்து வேன் கவிழ்ந்ததில் 2 பெண்கள் பலியானார்கள்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம், பொருளூர், தேவத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து திருப்பூருக்கு கூலி வேலைக்கு தினசரி ஆட்கள் சென்று வருகிறார்கள்.

    இவர்களை ஏற்றி செல்வதற்காக தனியார் நிறுவனம் சார்பில் வேன் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது இந்த பஸ் காலையில் ஆட்களை அழைத்து சென்று பின்னர் மாலையில் அவர்களது ஊருக்கு வந்து விடுவது வழக்கம்.

    அதன்படி இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஏற்றிய வேன் தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. 4 ரோடு பிரிவில் சென்ற போது வேன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் டிரைவரை கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் உள்ள பள்ளதில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த தொழிலாளர்கள் அனைவரும் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கி தேவத்தூரை சேர்ந்த வீரம்மாள் (வயது 50), பொருளூரை சேர்ந்த ரேவதி (35) ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×