search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா மாநில தொழிலாளர்கள்"

    • ஒடிசாவிலிருந்து மேலும் புதிய தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி வருவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றார்.
    • காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் இயங்கும் இடம் பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மையம் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கிறது.

    திருப்பூர்:

    மத்திய அரசின் டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் பயிற்சி முடித்த ஒடிசா மாநில தொழிலாளர்கள், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் இயங்கும் இடம் பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மையம் இந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுக்கிறது.

    தங்கள் மகன், மகளை பணியிடத்தில் நேரில் பார்த்து நலம் விசாரிப்பதற்காக ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்திலிருந்து பெற்றோர் 56 பேர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கீர்த்திவாசன் தலைமையிலான அதிகாரிகள் திருப்பூர் வந்தனர்.இக்குழுவினர் அவிநாசி - தெக்கலூர் மற்றும் பல்லடம் - காமநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றும் தங்கள் மகன், மகளை சந்தித்து நலம் விசாரித்தனர்.

    தங்கும் விடுதி, கேன்டீன், பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகளும் பெற்றோரும் பார்வையிட்டனர்.அப்போது பேசிய கஞ்சாம் மாவட்ட அதிகாரி கீர்த்திவாசன், திருப்பூரில் பணிபுரியும் கஞ்சாம் மாவட்டத்தை சேர்ந்த பல தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களில் வீடு கட்டியுள்ளனர். அவர்களின் குடும்ப பொருளாதாரம் மேம்பட்டுள்ளது என்றார். இடம் பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மைய மேலாளர் ராமசாமி கூறுகையில், ஒடிசாவிலிருந்து வந்த பெற்றோரை பல்வேறு நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று தொழில் சூழல் குறித்து உணரச்செய்கிறோம்.தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக பணிபுரிவதை பெற்றோர் உறுதி செய்துகொள்கின்றனர். இதன்மூலம் ஒடிசாவிலிருந்து மேலும் புதிய தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி வருவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றார்.

    ×