search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்வர்யா"

    • ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3.
    • 3 திரைப்படம் தெலுங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம் '3'. இந்த படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2012-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற, 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


    இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு தற்போது '3' படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மறு வெளியீடு செய்துள்ளனர். அங்கு இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் ஒரு பாடலை திரையரங்கில் இருக்கும் அனைவரும் பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    மேலும் திரையரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் தற்போது நடித்து வரும் வாத்தி படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிறது. '3' படத்தின் வெற்றியால் தெலுங்கில் வாத்தி படத்துக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இருவரும் பிரிவதாக அறிவித்த பிறகு தனது மகன்களுக்காக இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.

    நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது.

     

    தனுஷ் - ஐஸ்வர்யா

    தனுஷ் - ஐஸ்வர்யா

    சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும் அறிவித்த்திருந்தனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியிருந்தார்.

     

    தனுஷ் - ஐஸ்வர்யா

    தனுஷ் - ஐஸ்வர்யா

    இந்நிலையில் இருவரின் பிரிவிற்கு பிறகு மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக இருவரும் ஒன்றாக வந்தனர். இவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தனது மகனுக்காக இருவரும் ஒன்று சேர்ந்திருப்பதை ரசிகர்கள் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். 

    • 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
    • தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை.

     

    தனுஷ் - வேலையில்லா பட்டதாரி

    தனுஷ் - வேலையில்லா பட்டதாரி

    இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் தனுசுக்கும், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுசுக்கும் சைதாப்பேட்டை கோர்ட்டு சம்மன் அனுப்பியது.

     

    தனுஷ் - ஐஸ்வர்யா

    தனுஷ் - ஐஸ்வர்யா

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஐஸ்வர்யா வழக்கு தொடர்ந்தார். அதில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும். சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஐஸ்வர்யா நேரில் ஆஜராக விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டப்பட்டது.

     

    தனுஷ் - ஐஸ்வர்யா

    தனுஷ் - ஐஸ்வர்யா

    இந்நிலையில் இதே கோரிக்கையுடன் நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரனைக்கு வந்தது. தனுஷ் தரப்பு வழக்கறிஞர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனுஷ் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும் தனுஷ், ஐஸ்வர்யா இரண்டு பேரின் வழக்கையும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். 

    • ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
    • தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர். இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை.


    இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளை(வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகர் தனுசுக்கும், அவரது மனைவி ஐஸ்வர்யா தனுசுக்கும் சைதாப்பேட்டை கோர்ட்டு சம்மன் அனுப்பியது.


    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனுஷ், ஐஸ்வர்யா தனியாக வழக்கு தொடர்ந்து உள்ளனர். அதில் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும். சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.


    இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டில் தனுஷ், ஐஸ்வர்யா நேரில் ஆஜராக விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

    ×