search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐடி ஊழியர்"

    • பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
    • அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.

    மதுரை:

    மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் விஜய் நாராயணன். ஐ.டி. ஊழியரான இவர் கடந்த சில ஆண்டு களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கற்று தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் டேக் வாண்டோ மூலம் கற்களை குறைந்த நிமிடத்தில் கை யால் உடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.

    இந்நிலையில் புதிய முயற்சியாக விஜய் நாராயணன் தனது வீட்டின் மாடியில் எரியும் 29 சிமெண்ட் கான்கிரீட் கற்களை 30 விநாடிகளில் அடுத்தடுத்து உடைத்து சாதனை படைத்து உள்ளார். இவரது சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.

    இதன் மூலம் இந்தியாவில் குறைந்த வினாடியில் அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு இந்த சாதனையை பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் 25 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை செய்திருந்தார். தற்போது விஜய் நாராயணன் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.

    • சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன.
    • விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

    சென்னை:

    புயல் மழை காரணமாக சென்னையில் தரை தளங்களில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் உடனடியாக வடிந்து விடும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழை ஓய்ந்து 4 நாட்களாகியும் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை.

    வீடுகளில் இருந்து வெள்ளம் வடிந்த இடங்களில் கூட வீடுகளுக்கும் அனைத்து பொருட்களும் சேதமாகி குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. ஓரிரு நாட்கள் மாடிகளில் இருந்த வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள் உணவு, குடிநீர் பிரச்சினை காரணமாக மின்சாரம் இருக்கும் உறவினர்களில் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். உறவினர்களின் வீடுகளுக்கு செல்ல இயலாதவர்கள் லாட்ஜுகளில் அறை எடுத்து தங்குகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகள் விருந்தினர்களின் வருகையால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து ஓட்டல்களுக்கு செல்கிறார்கள். முன்பதிவு செய்து சென்றாலும் பல லாட்ஜுகளில் அவர்கள் தங்குவதற்கு அறை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் விடுதிகளின் அருகில் அறை கிடைக்குமா என்று ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். சிலர் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

    சென்னையில் லாட்ஜுகளுக்கு தட்டுப்பாடு நிலவியதால் பல லாட்ஜுகளில் ஒரு நாள் தங்குவதற்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் ஆக உயர்ந்தது. மேலும் ஓட்டல்களில் அறை கிடைத்தாலும் பால் மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களின் உணவுத் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.

    • தரமணி சரக உதவி ஆணையாளர் அமீர் அகமது இதைப்பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • புவனேஷ் உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை அருகே பள்ளிக்கரணை, ராஜலட்சுமி, 8-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் புவனேஷ். (வயது 27).

    இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் சர்வீஸ் டெஸ்க் அனலிஸ்ட் ஆக இரண்டறை ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவர் வழக்கமாக மதியம் 3.30 மணி அளவில் பணிக்கு வந்து இரவு 1:30 மணியளவில் பணி முடித்து வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    நேற்று வழக்கம்போல் மதியம் 3.30 மணிக்கு பணிக்கு வந்தார், இவருடன் நாக வெங்கட சாய் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    நேற்றுஇரவு 12 மணியளவில் சிகரெட் பிடிப்பதற்காக அவர் வேலை செய்யும் பத்தாவது மாடியில் இருந்து உடன் வேலை செய்யும் நண்பர் நாக வெங்கடசாய் இருக்கும் கீழ் தளத்திற்கு வந்தார். இருவரும் புகை பிடித்தவாறே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    சிகரெட் புகைத்து விட்டு மீண்டும் மேலே வேலை செய்யும் இடத்திற்கு புவனேஷ் சென்றார். சற்று நேரத்தில் யாரோ மேலிருந்து கீழே விழும் சப்தம் கேட்கவே பணியாளார்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது புவனேஷ் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்தனர். கீழே விழுந்ததில் அவரது தலை சிதைந்து, கைகள் உடைந்து துண்டாகி இறந்து கிடப்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் இரவு ரோந்தில் அலுவலில் இருந்த தரமணி சரக உதவி ஆணையாளர் அமீர் அகமது இதைப்பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    பின்னர் புவனேஷ் உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இறந்து போன நபர் சுமார் 10லட்சம் ரூபாய் வரை வங்கி மூலம் கடன் வாங்கி உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.

    ×