என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
    X

    ஆணவக்கொலை: கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

    • சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.

    கவின் வேறு சமூகத்தை சேர்ந்த சுபாசினி என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுபாசினியின் தம்பி சுர்ஜித், கவினை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தார்.

    இந்த ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கொலை நடந்த இடத்தில் இருந்து விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 5 நாட்கள் போராட்டத்திற்கு பின் நேற்று கவின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்

    Next Story
    ×