search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எவரெஸ்டு சிகரம்"

    • மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திய சுசான் லியோபோல்டினா ஜீசஸ் என்ற வீராங்கனை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்பினார்.
    • மருத்துவ குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் சுசான் லியோபோல்டினா ஜீசசை மீட்டு காத்மாண்டு கொண்டு வந்தனர்.

    காத்மாண்ட்:

    இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே மிக உயரமான சிகரமாகும்.

    இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைக்க மலைஏறும் வீரர்கள் பலரும் விரும்புவது வழக்கம். அதன்படி மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திய சுசான் லியோபோல்டினா ஜீசஸ் என்ற வீராங்கனை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்பினார்.

    இதன்மூலம் ஆசியாவில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்ட நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைக்க விரும்பினார். இதற்காக நேபாள அரசிடம் உரிய அனுமதி பெற்று அவர் மலை ஏற தொடங்கினார்.

    எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் இருந்து புறப்பட்ட மலையேற்ற வீராங்கனை சுசான் லியோபோல்டினா ஜீசஸ் முதல் 2 கட்டங்களை தாண்ட நீண்ட நேரம் எடுத்து கொண்டார். இதனை அறிந்த மருத்துவ குழுவினர் அவரது உடல் நிலை மலை ஏற போதுமானதாக இல்லை எனக்கூறி அவரை மலை ஏற்றத்தை நிறுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் சுசான் லியோபோல்டினா ஜீசஸ் மலை ஏற்றத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஏறினார். ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மருத்துவ குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் சுசான் லியோபோல்டினா ஜீசசை மீட்டு காத்மாண்டு கொண்டு வந்தனர்.

    அங்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திகொண்டு எவரெஸ்டு சிகரம் ஏறிய வீராங்கனை சுசான் லியோபோல்டினா ஜீசஸ் இறந்தது மலை ஏற்றக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×