search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலாஸ்டிக்"

    • பாடத்திட்டங்களுக்கும் டெக்ஸ்டைல் கமிட்டி அனுமதி வழங்கிவிட்டது.
    • வெகு விரைவில் புதிய பாட திட்டத்துடன் எலாஸ்டிக் உற்பத்தி பயிற்சிகள் துவங்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (டெமேட்டா), நிப்ட்-டீ கல்லூரியுடன் இணைந்து, நாட்டில் முதல் முறை எலாஸ்டிக்கிற்கான பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.

    எலாஸ்டிக் மெஷின் ஆபரேட்டர் மற்றும் ஓவன் எலாஸ்டிக் மெஷின் ஆபரேட்டர்களுக்கு செயல்வழி கற்றலுடன் கூடிய பயிற்சி அளிக்கும்வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு பாடத்திட்டங்களுக்கும் டெக்ஸ்டைல் கமிட்டி அனுமதி வழங்கிவிட்டது.கூடுதலாக குரோசெட் நேரோ பேப்ரிக் ஜூனியர் சூப்பர்வைசர், ஓவன் எலாஸ்டிக் சூப்பர்வைசர் பாடத்திட்டங்களுக்கும் அனுமதி எதிர்பார்க்கிறது எலாஸ்டிக் சங்கம்.

    அந்தந்த நிறுவனங்களிலேயே பயிற்சி மையங்களை உருவாக்கி அல்லது பொதுவான பயிற்சி மையத்தை உருவாக்கி எலாஸ்டிக் உற்பத்தி பயிற்சி அளிக்க ஆலோசித்துவருகின்றனர். வெகு விரைவில் புதிய பாட திட்டத்துடன் எலாஸ்டிக் உற்பத்தி பயிற்சிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×