search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.பி. நேரில்"

    • நாமக்கல் நகராட்சி சார்பில் சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
    • முதலைப்பட்டியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை ராஜேஷ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை ராஜேஷ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    நாமக்கல் நகருக்கு பைபாஸ் ரோடு மற்றும் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையாகும். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் நகராட்சி சார்பில் சுமார் ரூ. 20 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணி சுமார் 80 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் புதிய பஸ் நிலையம் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும். பின்னர் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மூலம் இந்த பஸ் நிலையம் திறப்பு விழா நடைபெறும்.

    இந்த புதிய பஸ் நிலை

    யத்திற்கு அணுகுசாலை அமைக்க, முதலைப்பட்டி யிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரம், நெடுஞ்சாலை துறையின் கிராம சாலைகள் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ. 25 கோடி மதிப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய பஸ் நிலையத்திற்கு பைபாஸ் ரோடுடன் கூடிய அணுகு சாலை அமைக்கப்படும். நாமக்கல் நகருக்கு புதிய பை-பாஸ் ரோடு திட்டம் ரூ. 194 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, பை-பாஸ் ரோட்டில் இருந்து, புதிய பஸ் நிலையத்திற்கு 200 மீட்டர் அளவில் அணுகு சாலை அமைக்கப்படுகிறது.

    நாமக்கல் புதிய பஸ் நிலையத்தின் மொத்த பரப்பு 12.89 ஏக்கர். சுமார் 10 ஏக்கர் பரப்பில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதில், 50 பஸ் நிறுத்தங்கள், 57 கடைகள், 2 ஓட்டல்கள், 7 பயணிகள் காத்திருப்பு பகுதி, 2 ஏ.டி.எம் மையங்கள், 3 கட்டண கழிப்பிடங்கள், பொருள் வைப்பறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, 200 இரு சக்கர வாகன நிறுத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்துமிடம், 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாமக்கல்

    நகராட்சி சேர்மன் கலாநிதி,

    துணைசேர்மன் பூபதி, கவுன்சி லர்கள் சிவக்குமார், சங்கீதா,

    நகராட்சி கமிஷனர் சென்னு

    கிருஷ்ணன், நெடுஞ்சா லைத்துறை உதவி செயற்பொ

    றியாளர் பரிமளா உள்ளிட்ட பலர் கலந்துகெண்டனர்.

    ×