search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.ஜி.ஆர். நினைவுநாள்"

    • இன்று 35-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் திரண்டனர்.

    மதுரை

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    எம்.ஜி.ஆரின் புகழை பரப்பு வகையில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி யில் பாடல்களும் ஒலிபரப்பு செய்யப்பட்டன.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அந்த கட்சியினர் பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.

    இதைத்தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் பொதுமக்க ளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப் பட்டன.

    மதுரையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் கே.கே.நகர் ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    ×