search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR memorial day"

    • எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • ரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னை:

    அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36வது நினைவு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது.

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவுநாளான இன்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவுவாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே அவருடைய உருவப்படங்களை வைத்து மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவுநாளான வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

    இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், பொதுமக்களும் இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    24-ந்தேதி அன்று அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே அவருடைய உருவப்படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; அவருடைய படங்களை வைத்து மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    அ.தி.மு.க., வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, இணை செயலாளர் சுகன்யா தாஸ், துணைச் செயலாளர் ஜெயபிரகாசம், பொதுக்குழு உறுப்பினர் குட்டிலட்சுமி சிவாஜி, பகுதி செயலாளர்கள்‌ நாகு, குப்புசாமி, அணி மாவட்ட செயலாளர்கள் அமர்நாத், ராகேஷ், ஆர்.சுந்தரராஜி, எம்.ஏ.ராஜா, பாலச்சந்தர், வி.எல்.ராஜன், அண்ணாமலை, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் எஸ். குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று 35-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் திரண்டனர்.

    மதுரை

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    எம்.ஜி.ஆரின் புகழை பரப்பு வகையில் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கி யில் பாடல்களும் ஒலிபரப்பு செய்யப்பட்டன.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அந்த கட்சியினர் பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முன்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி னர்.

    இதைத்தொடர்ந்து மதுரை கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலைக்கு செல்லூர் ராஜூ தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் பொதுமக்க ளுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப் பட்டன.

    மதுரையில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் கே.கே.நகர் ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இமயத்தை வெல்லும் உயரம் கொண்ட புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம் என்று கூறி எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். #MGR #MGRMemorialDay
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 31-வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

    இதையொட்டி அ.தி.மு.க.வினர் இன்று தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    பின்னர் எம்.ஜி.ஆர். சமாதியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-

    ஏழைக்கு இரங்குவதும், எளியோர்க்கு உதவுவதும் வாழ்வின் லட்சியமாகக் கொண்ட கடவுள் உள்ளம், கருணையின் ஊற்றாம் எம்.ஜி.ஆரின் உள்ளம் என்று சரித்திரம் சொல்லும். அத்தகைய மகத்தான மாமனிதர், காட்டிய பாதையில் வாழ்ந்து, அ.தி.மு.க.வை காத்திட உறுதி ஏற்போம்.

    இமயத்தை வெல்லும் உயரம் கொண்ட புரட்சித் தலைவரின் புகழ் எந்நாளும் உயர்ந்திட உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

    ஏழை, எளியோரும், தாய்க்குலமும், நாளை உலகை ஆளப்போகும் தமிழ்ச் சந்ததியும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்நாளும் காப்போம், காப்போம்.

    புரட்சித்தலைவி அம்மாவை அடையாளம் காட்டிய எம்.ஜி.ஆர்., திராவிட இயக்க வரலாற்றின் நிகரில்லா மாதரசி புரட்சித்தலைவி அம்மாவை போல, புரட்சித் தலைவரின் இயக்கம் மக்களுக்கான மக்கள் இயக்கமாய் தொடர்ந்து தொண்டாற்றிட, துணை நிற்போம், துணை நிற்போம்.

    மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்-அமைச்சரான சரித்திர சிறப்புக்குரிய எம்.ஜி.ஆரைப் போலவே, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மீண்டும் சட்டமன்ற தேர்தல் என்று ஒவ்வொரு தேர்தலிலும் மகத்தான மக்கள் செல்வாக்கால் வெற்றி சிகரத்தில் கழகத்தை வீற்றிருக்க செய்தவர் நம் புரட்சித்தலைவி அம்மா.

    கழகத்தின் கண்களாய் திகழும் நம் இருபெரும் தலைவர்களின் சாதனைகளை தொடரும் வகையில், வருகிற சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என்று அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற உழைப்போம், உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி “எம்.ஜி.ஆருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்” என்றார். அதை ஏற்று தொண்டர்கள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். #MGR #MGRMemorialDay

    எம்.ஜி.ஆரின் 31-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி காலை அவரது நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 31-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

    அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருடைய நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×