search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.சி.சி. பரிசு"

    • பி.எஸ்.ஆர். கல்லூரி என்.சி.சி. மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
    • 150-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    டெல்லியில் 75-வது இந்திய குடியரசு தின விழா முகாம் நடந்தது. இதில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 3-ம் ஆண்டு எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் துறையை சேர்ந்த என்.சி.சி. மாணவரும், சீனியர் அண்டா் ஆபீசருமான ஆர்.சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் மற்றும் 2-ம் பரிசுகளை வென்றார்.

    ஒரு மாதகாலத்திற்கும் மேலாக நடந்த இந்த முகாமில் அகில இந்திய அளவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்றனர்.

    இந்த முகாமின் போது நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் சிவசுப்பிரமணியன் பாட்டுப் போட்டியில் முதல்பரிசும், நடனப்போட்டியில் முதல் மற்றும் 2-ம் பரிசும் பெற்றார்.

    நிறைவுவிழாவில் பிரதமர் மோடி என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த முகாமின் நிறைவு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் என்.சி.சி. தலைமை அதிகாரி லெப்டினட் ஜெனரல் குர்பீர் பால்சிங், மேஜர் ஜெனரல் ஷெராவத் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

    இந்திய அளவில் தமிழக அணி அதிக பரிசுகளை பெற்று, 2-ம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அணியின் சார்பில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர் சிவசுப்பிரமணியன் பரிசை பெற்றுக்கொண்டார்.

    வெற்றி பெற்ற மாணவரை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் மாதவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    ×