search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்காலம்"

    • குழந்தைகளின் எதிர்காலம் பயனுள்ளதாக இருக்கும் வகையில் பணி இருக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • முதுநிலை விரிவுரையாளர் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் தஸ்தஹீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் பள்ளிக்கல்வி துறை யின் மூலம் 'எண்ணும் எழுத்தும்" திட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    'எண்ணும் எழுத்தும்' என்னும் மாபெரும் திட்டம் கடந்தாண்டு தொடங்கப் பட்டு 1-ம் முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு அவர்க ளின் மனநிலைக்கேற்ப நாடக வடிவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் வாயி லாகவும், நடன வடிவிலும், கருத்தரங்கம் மூலமாக என பல்வேறு நிலைகளில் குழந்தைகள் எளிதாக கல்வியை கற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உள்ளது. அதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனம் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இத்தகைய திட்டம் குழந்தைக ளிடமும், பெற்றோர்களி டமும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஆரம்ப கல்வி யில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது.

    அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடப்பாண்டிற்கு 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டத்தை விரிவுப்ப டுத்தி எளிய முறையில் மாணவ, மாணவிகளின் மனநிலைக்கேற்ப கல்வி கற்பிக்க இத்திட்டம் தொடங்கி உள்ளது.

    இதன் நோக்கம் சுற்றுச்சூழலை அறிந்து குழந்தைகளுக்கு அச்சத்தை போக்கி எதிர்காலத்தின் நிலையை உணர்ந்து கல்வியை கற்பதற்கு ஏது வாக உங்களுடைய பணி இருந்திட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் இந்த பணியால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் பயனுள்ளதாக இருக்கும். அதற்கேற்ப உங்கள் பணி அமைந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், சாந்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×