search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி ஒன்றியக்குழு"

    • ஆற்று பாலம் சேதமடைந்துள்ளதால் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    நெமிலி:

    நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன் வரவேற்றார்.

    அப்போது சயனபுரம், சிறுணமல்லி, பின்னாவரம், கீழ்வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காலனிகளில் சமுதாய கூடங்கள் அமைக்கவேண்டும். அரக்கோணம்-ஒச்சேரி சாலையில் அமைந்துள்ள கல்லாற்று பாலம் மற்றும் சேந்தமங்கலம் - பாணாவரம் சாலையில் அமைந்துள்ள கொசஸ்தலை ஆற்று பாலம் சேதமடைந்துள்ளதால் புதிய மேம்பாலம் கட்ட வேண்டும்.

    மேலும் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்குப்பம், சயனபுரம், சித்தேரி, நாகவேடு, மகேந்திரவாடி,காட்டுபாக்கம்,

    பொய்கைநல்லூர், சேந்தமங்கலம், நெடும்புலி, பனப்பாக்கம், அசநெல்லிகுப்பம் உள்ளிட்ட 12 பகுதிகளில் இயங்கிவரும் துணை சுகாதார நிலையங்களுக்காக புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

    • புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அனுமதியும், நிதியும் கோரி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்புவது.
    • பள்ளி வளாகங்களில் பழுதடைந்து பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.ஏ.சண்முகவடிவேல், ஆணையாளர் எஸ்.மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சிகள்) மு.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு 60ஆண்டுகளுக்கு மேல் ஆனதாலும், மேற்கூரை பழுதான நிலையில் உள்ளதாலும் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அனுமதியும், கட்டிடம் கட்டுவதற்கான நிதியும் கோரி அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்புவது. தேவனூர்புதூர், கொடிங்கியம், பூலாங்கிணர், ராகல்பாவி, கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பம்பட்டி சமத்துவபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களில் பழுதடைந்து பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள சமையல் கூடம், கழிப்பறை, சத்துணவு மையக்கட்டிடம் ஆகியவற்றை, கலெக்டரின் அனுமதி பெற்று இடித்து அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×