search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊத்துக்குளி"

    குன்னத்தூர் பேரூராட்சி ஒளி விளக்கு நகரில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் தலா ரூ.2.10 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் 16 வீடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.
    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.46.69 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் வினீத்  ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கருமஞ்சரை ஊராட்சியில் ரூ.5.36 லட்சம் மதிப்பீட்டில் நீர் வரத்து கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய பண்ணைக்குட்டை, அத்திப்பட்டி காலனியில் ரூ.5.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம், காவுத்தம்பாளையத்தில் ரூ.9.79 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்பப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவர், செங்காளிபாளையம் ஊராட்சியில் ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    இதைத்தொடர்ந்து குன்னத்தூர் பேரூராட்சி ஒளி விளக்கு நகரில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் தலா ரூ.2.10 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் 16 வீடுகளை பார்வையிட்டார். 

    ஆய்வின்போது ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்ஜோதிநாத், குன்னத்தூர் செயல் அலுவலர் ரேணுகா, உதவி செயற் பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
    ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி முதல் செங்கப்பள்ளி, காடபாளையம், பொன்னாபுரம், கொடியம்பாளையம் நால்ரோடு, ஊத்துக்குளி ரயில் நிலையம், திம்மநாயக்கன் பாளையம், பெட்டிக்கடை பகுதிகளில் கனமழை பெய்தது. 

    2 மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையின் காரணமாக சாலையின் ஓரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிக பட்சமாக திருமூர்த்தி ஆய்வு மாளிகையில் 129 மி.மீட்டரும், அணைப்பகுதியில் 77மி.மீட்டர் மழையும், ஊத்துக்குளியில் 44மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் பிரதான சாலையில் ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

    இதன் காரணமாக பொதுமக்கள் இப்பகுதியை கடக்க ரெயில்வே பாலத்தின் மீது ஏறி அபாயகரமாக ரெயில் ரோட்டை கடந்து பாலத்தின் மறுபுறம் சென்றனர். 

    மேலும் கழிவு நீரும் கலந்து செல்வதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர். இதனால் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என ஊத்துக்குளி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
    விபத்துக்களை தடுக்க ஊத்துக்குளி ரவுண்டானா - நால் ரோடு சந்திப்பு திருப்பூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    ஊத்துக்குளி:

    திருப்பூர் ஊத்துக்குளி ரவுண்டானா பகுதியில் இருந்து திருப்பூர் மெயின் சாலைக்கு செல்லும் வழியில் 4 ரோடு பிரிவு உள்ளது. இந்த சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி , புகழ்பெற்ற கதித்தமலை முருகன் கோவில் உள்ளது. 

    காலை நேரத்தில் இப்பகுதியில் அதிகமான வாகன நெரிசல் காணப்படுகிறது. மேலும் மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். வாகனங்கள் வேகமாக வருவதால் பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் அந்த வழியாக செல்கின்றனர். விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

    எனவே விபத்துக்களை தடுக்க ஊத்துக்குளி ரவுண்டானா - நால் ரோடு சந்திப்பு திருப்பூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    இருப்பினும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே இனிமேல் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×