search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக வன நாள்"

    • அமெரிக்கன் கல்லூரியில் உலக வன நாள் விழா கொண்டாடடப்பட்டது.
    • வணிகவியல் துறை தலைவர் ஹிலாரி ஜோசப் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியின் கூடுதல் வளாகத்தில் உலக வன நாள் விழா நடந்தது.கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், கூடுதல் வளாக இயக்குனர் பால் ஜெயக்கர் வழிகாட்டு தலில் விழா கொண்டா டப்பட்டது. இதில்  மாவட்ட வன அலுவலர் குருசாமி தபோலா தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

     துணை வளாக இயக்குனர் திவா கரன் வரவேற்றார். உதவி வன பாதுகாவலர் ராஜா காடுகளை பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்கையும், முக்கியத்து வத்தையும் விளக்கிப் பேசினார். வணிகவியல் துறை தலைவர் ஹிலாரி ஜோசப் நன்றி கூறினார். பிறகு வன பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளுக்கு போட்டி கள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. 

    விழா ஏற்பாடுகளை உயிரி தொழில்நுட்பத்துறை தலைவர் மணிவண்ணன், அகில், வணிகவியல் துறை தலைவர் ஹிலாரி ஜோசப், கல்லூரியின் பசுமை மேலாண்மை திட்ட இயக்கு னர் ராஜேஷ், மதுரை மாவட்ட வன அதிகாரி களோடு இணைந்து செய்திருந்தனர். 

    • வாழப்பாடி அடுத்த தும்பல் வனச்சரகத்தின் சார்பில், புழுதிக்குட்டை ஊராட்சி கீரைப்பட்டி மலை கிராமத்தில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவிற்கு, தும்பல் வனச்சரகர் விமல் குமார் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த தும்பல் வனச்சரகத்தின் சார்பில், புழுதிக்குட்டை ஊராட்சி கீரைப்பட்டி மலை கிராமத்தில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, தும்பல் வனச்சரகர் விமல் குமார் தலைமை வகித்தார். வனத்தால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள், பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம், காடு வளர்ப்பு மற்றும் காட்டுத் தீ பரவல் தடுப்பு, வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து, வனவர்கள் ஸ்ரீகணேஷ், ராஜேஸ்கண்ணா மற்றும் வனக்காவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வனத்தையும், வன விலங்குகளை பாதுகாப்பதென வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×