search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை ஹாக்கிப் போட்டி"

    • பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்ட நேர முடிவில் 4 - 0 என மலேசியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.

    புவனேஸ்வர்:

    15-வது உலகக் கோப்பை ஹாக்கி திருவிழா ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ், தென்ஆப்பிரிக்கா, 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஜெர்மனி, தென்கொரியா, ஜப்பான், 'சி' பிரிவில் நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி, 'டி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து - மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.  ஆட்ட நேர முடிவில் 4 - 0 என மலேசியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.

    • சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
    • மாலை 3 மணிக்கு ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (ஏ பிரிவு) அணிகளும் மாலை 5 மணிக்கு இங்கிலாந்து-வேல்ஸ் (டி பிரிவு) அணிகளும் மோதுகின்றன.

    ரூர்கேலா:

    15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று ஒடிசாவில் தொடங்குகிறது. ரூர்கேலா, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் 29-ந்தேதி வரை நடக்கிறது.

    இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவைகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால் இறுதிக்கு தகுதி பெறும். 2 மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் விளையாடும். அதில் இருந்து மேலும் 4 அணிகள் கால் இறுதியில் தேர்வாகும்.

    தொடக்க நாளான இன்று 4 ஆட்டங்கள் நடக்கிறது. பகல் 1 மணிக்கு நடக்கும் போட்டியில் அர்ஜென்டினா-தென் ஆப்பிரிக்கா (ஏ பிரிவில்) மோதுகிறது. மாலை 3 மணிக்கு ஆஸ்திரேலியா-பிரான்ஸ் (ஏ பிரிவு) அணிகளும் மாலை 5 மணிக்கு இங்கிலாந்து-வேல்ஸ் (டி பிரிவு) அணிகளும் மோதுகின்றன.

    இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், மன்பிரீத்சிங், ஹர்திக் சிங், மன்தீப்சிங், அமித் ரோகிதாஸ், ஆகாஷ் தீப்சிங் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும். இளம் வீரர்களை கொண்ட ஸ்பெயின் அணி வெற்றி முனைப்பில் உள்ளது. இதனால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×