search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்சாக கொண்டாட்டம்"

    • வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
    • ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, ஈரோடு மாநகர் பகுதி, மொடக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தங்கி உள்ளனர்.

    குறிப்பாக பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வட மாநிலத்தவர்களின் முக்கியமான பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று உற்சா கமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    இதற்காக ஈரோட்டில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

    மேலும் ஈரோட்டில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு முதலே ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் இந்திரா நகர், கருங்கல் பாளையம், கே.எஸ்.நகர், திருநகர் காலனி, வளையகார வீதி, வி.வி.சி.ஆர். நகர், அக்ரஹார வீதி போன்ற பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி னர்.

    ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் ஹோலியை கொண்டாடினர்.

    • கோவில்களில் கூட்டம் அலைமோதியது
    • வாணவேடிக்கைகள் கண்ணை கவர்ந்தது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமர்சையாக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியன்று காலையில் எண்ணை தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து சிறுவர் சிறுமியர் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். புதுமணத் தம்பதியினரும் புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் நகரில் நேற்று இரவு சிறுவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். வாண வேடிக்கைகள் கண்ணை கவரும் வகையில் இருந்தன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாண வேடிக்கைகளை கண்டு கழித்தனர்.கோட்டார், ஒழுகினசேரி, மீனாட்சிபுரம், பீச் ரோடு பகுதிகளில் உள்ள தெருக் களில் வாண வேடிக்கைகள் நடந்த வண்ணம் இருந்தது.

    கொட்டாரம், மயிலாடி, தக்கலை, இரணியல், மார்த்தாண்டம் உள் பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாண வேடிக்கைகள் பிரம்மிக்கும் வகையில் இருந்தன. தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு இனிப்பு களை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.

    தீபாவளி பண்டிகையை யொட்டி குமரி மாவட்டத் தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நாகர்கோவில் நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்தபெருமாள் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடு பட்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, இரணியல் சப்- டிவிஷன் களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். இரவு நேரங்களில் 2 ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். ஆரல் வாய்மொழி, அஞ்சு கிராமம், களியக்காவிளை சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண் காணிப்பு பணி மேற் கொள்ளப்பட்டது. பாது காப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டு இருந்த னர்.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடலோர காவல் படை போலீசாரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி இன்று பள்ளி கல்லூரி களுக்கு தமிழக அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள் இன்று மாலை வெளியூர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னை உள்பட வெளியூர்களுக்கு செல்ல இன்று மாலை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×