search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தர பிரதேச போலீஸ்"

    • போலீஸ்காரர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • 4 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் மேல்முறையீடு செய்தனர்

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் கடந்த 1991-ம் ஆண்டு நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47 போலீஸ்காரர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில் இடைப்பட்ட காலத்தில் 4 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    விசாரணையின் முடிவில், 43 போலீசாருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொடுங்குற்றத்தை செய்ததால் ஒருவரை கொல்வது போலீசாரின் கடமை அல்ல என்றும், தவறு செய்தவர்களை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மொராதாபாத் போலீசார் அங்கு சென்றபோது மோதல் ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
    • பாஜக தலைவர் புல்லார் குற்றவாளியை மறைக்க முயன்றதாக மொரதாபாத் போலீஸ் அதிகாரி குற்றம்சாட்டினார்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சுரங்க மாபியாவைச் சேர்ந்த ஜாபர் என்பவரை பிடிப்பதற்காக உத்தர பிரதேச போலீசார் அந்த கிராமத்தை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் துப்பாக்கி குண்டு உள்ளூர் பாஜக தலைவர் குர்தாஜ் புல்லாரின் மனைவி குர்பீரித் கவுர் (வயது 28) மீது பாய்ந்தது. 5 உ.பி. போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் இரு மாநில காவல்துறைகளுக்கிடையே பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

    உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் இருந்து ஜாபரை போலீசார் பிடிக்க முயன்றபோது அவர் அங்கிருந்து தப்பி, எல்லை வழியாக அண்டை மாநிலமான உத்தரகாண்ட்டில் புகுந்து பாஜக தலைவர் புல்லாரின் பண்ணை வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். மொராதாபாத் போலீசார் அங்கு சென்றபோது மோதல் ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் புல்லாரின் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உ.பி. போலீசார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

    பாஜக தலைவரின் மனைவி இறந்ததையடுத்து கோபமடைந்த கிராமத்தினர், 4 போலீஸ்காரர்களை சிறைப்பிடித்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    மிகவும் அலட்சியமாக துப்பாக்கி சூடு நடத்தி பெண்ணை கொலை செய்தது தொடர்பாக உ.பி. போலீசார் மீது உத்தரகாண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    பாஜக தலைவர் புல்லார் குற்றவாளியை மறைக்க முயன்றதாக மொரதாபாத் போலீஸ் அதிகாரி குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை புல்லார் மறுத்தார். உள்ளூர் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் எதுவும் ஏற்படவில்லை, போலீசார் வந்ததும் துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் அவர்களை சிறைப்பிடிக்கவில்லை, உத்தரகாண்ட் போலீசில் அவர்களை ஒப்படைத்தோம் என புல்லார் விளக்கம் அளித்தார்.

    இந்த களேபரத்துக்கு மத்தியில், போலீசார் தேடிச் சென்ற குற்றவாளி ஜாபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    ×