search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவிமையம்"

    • மகளிர் உரிமைத்தொகை நிலவரம் குறித்து அறிய ஏற்பாடு
    • நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்

    கோவை,

    மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற முகாம்கள் மூலம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 விண்ணப் பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 2 லட்சத்து 81 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ள்ளன. தற்போது, வரை வருவாய்த் துறை, மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறை அலுவ லர்கள், நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் கலந்தாய்வுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் திட்ட தொடக்க விழா நடக்கிறது. கோவையில் ஈச்சனாரியில் கற்பகம் கலை, அறிவியல் கல்லூரியில் இன்று பிற்பகலில் விழா நடக்கிறது. விழாவில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு திட்டத் தின் அட்டைகளை வழங்குகி றார். இவ்விழாவில் 2500 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத் தில் தேர்வு செய்யப்பட்ட குடும்பத் தலைவிகள் பலருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் முதல் கட்டமாக ரூ.1 செலுத்தி புதன் கிழமை சோதனை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, நேற்று காலை முதல் பயனா ளிகளின் கணக்கில் ரூ.1000 செலுத்தும் பணி தொடங்கி யுள்ளது. இதனால், இல்லத்த ரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த வர்கள் தங்களது விண்ணப் பத்தின் நிலையை அறிந்து கொள்ள அரசு அலுவல கங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் எண், விண்ணப்பத்துக்கு தாக்கல் செய்த கைப்பேசி எண் ஆகியவற்றுடன் நேரில் சென்றோ அல்லது பிரத்ய ேக எண்ணை தொடர்பு கொண்டோ தகவல்களை அறிந்து கொள்ளலாம். மேலும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியருக்கு மேல் முறையீடு செய்து கொள்ள லாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் 90479 44155, பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகம் 89039 29890, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 90038 59054, ஆனைமலை 88079 77531, அன்னூர் 88387 18323, கோவை வடக்கு 90871 44755, கோவை தெற்கு 83001 22671, கிணத்துக்கடவு 89034 97949, மதுக்கரை 90422 67589, மேட்டுப்பா ளையம் 90435 18625, பேரூர் 88709 86906, பொள்ளாச்சி 88703 96625, சூலூர் 90034 96085, வால்பாறை 94862 11953.

    ×