search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு விற்பனையாளர்கள்"

    • அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பலகாரங்கள் வைத்து விற்பனை செய்யக்கூடாது.
    • சமீபத்தில் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை, நாகப்பட்டினம் நகராட்சி சார்பில், உணவு விற்பனையாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உரிமம், பதிவுச் சான்று முகாம் நாகப்பட்டினம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

    உணவு விற்பனை நிறுவனங்கள் மீது புகார்களும் அதிகம் வரத் துவங்கியுள்ளது, உணவு விற்பனை நிலையங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும், கோழி, ஆட்டிறைச்சி உள்ளிட்ட வற்றைகையாளும் உணவு ஹோட்டல்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கையாள வேண்டும்.

    பழைய மற்றும் சமைத்து மீதமாகும் அசைவ உணவுகளை குளிர் பதனப் பெட்டிகளில் வைத்து மீண்டும் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

    சைவ மற்றும் அசைவ உணவு தயாரிப்பில் செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது. அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் பலகாரங்கள் வைத்து விற்பனை செய்யக்கூடாது.

    தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளில் சட்னி, சாம்பார், குருமா, காப்பி, டீ போன்றவற்றை கட்டி விற்பனை செய்யக்கூடாது. புளித்துப்போன மற்றும் கெட்டுப்போன நிலையில் தயிர், மோர் மற்றும் தேங்காய் சட்னி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்றார்.

    இதில் ஹோட்டல் மற்றும் பேக்கரி உணவக சங்க நாகப்பட்டினம் நகரத் தலைவர் முருகையன், சங்க நிர்வாகிகள் பாண்டியன், மகேஷ் உள்ளிட்டு, ஹோட்டல், டீக்கடை, பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், இட்லி கடை, சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் 60-க்கும் அதிகமான உணவு விற்பனையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    20-க்கும் மேற்பட்டோர் உணவு பாதுகாப்புத்துறை பதிவுச் சான்று வேண்டி விண்ணப்பம் அளித்தனர்.முடிவில்

    திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆண்டனிபிரபு நன்றி கூறினார்.

    ×