search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை உழவர் சந்தை"

    • உழவர் சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள், விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறிகள் வாங்க வருகின்றனர்.

    உழவர் சந்தை அமைந்துள்ள கபூர்கான் வீதியில், போதிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலையில், நேற்று முன்தினம் பெய்த சிறிய அளவிலான மழைக்கு கூட தாங்காமல் வெள்ள நீர் தேங்கியுள்ளது.குண்டும், குழியுமான ரோட்டில் பல இடங்களில் குளம் போல், மழை நீர் தேங்கியுள்ளது. அதே போல் உழவர் சந்தை நுழைவாயில் மற்றும் வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.வளாகத்தில், குறைந்த அளவே கடைகள் உள்ள நிலையில் பெரும்பாலான விவசாயிகள் வளாகத்தில் தரையில் வைத்தே காய்கறிகள் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் காய்கறிகள் மண், சேறு என பாதிப்பதோடு, வளாகத்திற்குள் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அங்கு வரும் மக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, உழவர் சந்தை ரோட்டில் மழை நீர் வடிகால் வசதி மற்றும் குண்டும், குழியுமான ரோட்டை சரி செய்யவும், உழவர் சந்தை வளாகத்தில் மழை நீர் தேங்காமலும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது விளை நிலங்களிலிருந்து விளையும் காய்கறிகளை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து  விற்பனை செய்கின்றனர். இந்த காய்கறிகளை ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் வாங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை உழவர் சந்தைக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி கொண்டு செல்வதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    ஆகையால்  சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இப்பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உழவர் சந்தை முன்பு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது.

    மேலும் போக்குவரத்து இடையூறு இல்லாத இடங்களில் வாகன நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    ×