என் மலர்

  செய்திகள்

  உடுமலை உழவர்சந்தை முன்பு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
  X
  உடுமலை உழவர்சந்தை முன்பு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.

  உடுமலை உழவர் சந்தை முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது விளை நிலங்களிலிருந்து விளையும் காய்கறிகளை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து  விற்பனை செய்கின்றனர். இந்த காய்கறிகளை ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் வாங்கி வருகின்றனர்.

  இந்த நிலையில் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை உழவர் சந்தைக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி கொண்டு செல்வதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

  ஆகையால்  சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இப்பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உழவர் சந்தை முன்பு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது.

  மேலும் போக்குவரத்து இடையூறு இல்லாத இடங்களில் வாகன நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×