search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு போலீசார்"

    • ஊத்தங்கரையில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார்.
    • வீரப்பன் சத்திரம் போலீசார் அங்கு சென்று 10 பவுன் நகையை மீட்டனர்.

    ஈரோடு:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (35). பூட்டிய வீட்டுக்குள் புகுந்து திருடுவதில் கில்லாடி. இவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    ஈரோடு மாநகர பகுதியில் 2 திருட்டு வழக்குகள், சித்தோட்டில் 2 திருட்டு வழக்குகளும் இவர் மீது உள்ளது.இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த திருப்பதியை ஆந்திரா மாவட்டம் சித்தூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாநகரில் அவர் மீது பதிவாகியிருந்த திருட்டு வழக்கை விசாரிப்பதற்காக திருப்பதியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ஆந்திரா விரைந்து சென்றனர்.

    பின்னர் சிறப்பு அனுமதி பெறப்பட்டு நேற்று முன்தினம் திருப்பதி ஈரோடுக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று முன்தினம் வீரப்பன்சத்திரம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஈரோடு மாநகரில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் அவர் திருடிய 10 பவுன் நகையை கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கூறினார்.

    அதன் பேரில் வீரப்பன் சத்திரம் போலீசார் அங்கு சென்று 10 பவுன் நகையை மீட்டனர். ஒரு நாள் காவல் முடிவு அடைந்ததையடுத்து நேற்று மீண்டும் திருப்பதியை ஆந்திரா மாவட்டம் சித்தூர் போலீசாரிடம் வீரப்பன் சத்திரம் போலீசார் ஒப்படைத்தனர்.

    ×