search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் பலி"

    • காரை வேகமாக இயக்கி டிரைவர் பாலத்தை கடக்க முயன்றார். அப்போது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
    • காரில் இருந்த 5 பேரும் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக மவுனிகா மனம் தளராமல் தனது செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பி கொத்தகோட்டா மண்டலம் தொகலப்பள்ளியை சேர்ந்தவர் ரமணா. தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மகள் மவுனிகா (வயது 22), பி.டெக் முடித்துவிட்டு பெங்களூரில் பணிபுரிந்து வந்தார்.

    ரமணா தனது மனைவி உமாதேவி (37) மற்றும் உறவினர் ஸ்ரீநிவாசுலு (39), ஆகியோர் தனியார் கார் டிரைவருடன் பெங்களூருவுக்கு சென்றனர். பின்னர் தனது மகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு காரில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பலத்த மழை பெய்ததால் சம்பாதி கோட்டா என்ற இடத்தில் ஆற்றின் நடுவில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்று கொண்டு இருந்தது.

    காரை வேகமாக இயக்கி டிரைவர் பாலத்தை கடக்க முயன்றார். அப்போது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் காரில் இருந்த 5 பேரும் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக மவுனிகா மனம் தளராமல் தனது செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனை அறிந்து உடனடியாக அங்கு வந்த அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீசார் கயிறு கட்டி காரை வெளியே எடுத்தனர். இதில் கார் டிரைவர் உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், மவுனிகா மட்டும் காரில் இருந்த அனைவரையும் காப்பாற்ற கடைசி மூச்சு வரை முயன்ற நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

    பின்னர், பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் மவுனிகாவின் உடல் பாலத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் அவரது மனைவி அபிராமி.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் காரைக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு பண்ணை உள்ளது.

    இங்கு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகநாதன் மற்றும் அவரது மனைவி அபிராமி(வயது30) ஆகியோர் 3 குழந்தைகளுடன் தங்கி மாந்தோப்பை பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மாந்தோப்புக்கு அருகே உள்ள நிலத்தில் முள்செடிகளை ஜே.சி.பி.எந்திரத்தால் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்றை அகற்ற முயன்றனர்.

    இதனை அபிராமி அருகே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். ஜே.சி.பி எந்திரம் தென்னை மரத்தை அகற்றும் போது திடீரென அருகே இருந்த மின் வயர்கள் மீது சாய்ந்தது.

    இதில் அங்கிருந்த சிமெண்டால் ஆன மின்கம்பம் இரண்டாக முறிந்து அருகில் நின்று கொண்டிருந்த அபிராமி மீது விழுந்தது. மேலும் மினி வயர்களும் அறுந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

    மின்கம்பத்தின அடியில் சிக்கிய அபிராமி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கூடுவாஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×