search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை ஆப்கானிஸ்தான் தொடர்"

    • ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி மற்றும் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஹம்பன்டோட்டாவில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசாங்க - கருரத்ணே களமிறங்கினர். 4 ரன்கள் இருந்த போது கருரத்ணே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெண்டிஸ் 11 ரன்னிலும் மேத்யூஸ் 12 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    84 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. இதனையடுத்து அசலங்கா - டி செல்வா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படித்திய டி செல்வா 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சனகா 17 ரன்னிலும் தசுன் ஹெமந்தா 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அசலங்கா 91 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

    இறுதியில் இலங்கை அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி மற்றும் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
    • ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    கொழும்பு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது.

    இந்நிலையில் கீழ் முதுகு காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிதானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். ஜூன் 7-ந் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அனைத்து போட்டியிலும் (17 போட்டிகள்) விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. தொடரில் முதல் ஒருநாள் போட்டி ஜூன் 2-ம் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி ஜூன் 4-ம் தேதியும், 3-வது ஒருநாள் போட்டி ஜூன் 7-ம் தேதியும் ஹம்பாந்தோட்டாவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாற்று வீரர்களாக 4 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் அணி விவரம்:

    ஹஷ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மத்துல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரான், ரியாஸ் ஹசன், நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, இக்ராம் அலிகைல் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அமகது, அப்துல் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, பரித் அகமது மாலிக்.

    மாற்று வீரர்கள்: குல்பாடின் நைப், ஷாஹிதுல்லா கமால், யாமின் அஹ்மத்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர்.

    ×