search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை ஆப்கானிஸ்தான் தொடர்"

    • குர்பாஸ் 70 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
    • இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரனா, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸஸாய் 45 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார்.

    அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இப்ராஹிம் சத்ரன் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - அஸ்ரதுல்லா ஒமர்ஸாய் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். குர்பாஸ் 70 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரனா, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

    • இரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.
    • 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

    தம்புள்ளா:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 19 ஓவரில் 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஹசரங்கா 67 ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி 3 விக்கெட்டும், நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. கேப்டன் இப்ராஹிம் சட்ரன்

    மட்டும் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார்.

    கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

    இலங்கை அணி சார்பில் மதீஷா பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 266 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து விளையாடிய இலங்கை 267 ரன்கள் எடுத்து வென்றது.

    கொழும்பு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

    டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. அடுத்து நடைபெறும் ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகலேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஒவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 65 ரன், ஓமர்சாய் 54 ரன் எடுத்தனர். குர்பாஸ் 48 ரன்னிலும், அலிகில் 32 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இதையடுத்து, 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிசங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ இருவரும் அதிரடியாக ஆடினர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 173 ரன்கள் சேர்த்த நிலையில், அவிஷ்கா பெர்னாண்டோ 91 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய பதும் நிசங்கா சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 40 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் பேட் செய்த இலங்கை 381 ரன்களைக் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 339 ரன்கள் எடுத்தது.

    பல்லேகலே:

    ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 210 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ 88 ரன்னில் அவுட்டானார். சமர விக்ரமா 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை அனுபவ வீரர் முகமது நபி, ஒமர்சாய் ஜோடி சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

    சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 242 ரன்கள் திரட்டியது. முகமது நபி 136 ரன்களில் அவுட்டானார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஒமர்சாய் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை 381 ரன்களைக் குவித்தது.

    பல்லேகலே:

    ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்டில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது.

    அவிஷ்கா 88 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்னில் வெளியேறினார்.

    3வது விக்கெட்டுக்கு நிசங்கா, சமரவிக்ரமா ஜோடி 120 ரன்களை சேர்த்தது. சமர விக்ரமா 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சிறப்பாக ஆடிய நிசங்கா இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 211 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

    • இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

    கொழும்பு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. அதன்படி இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. 3 ஒருநாள் போட்டிகளுமே பல்லேகலே மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    குசல் மென்டிஸ் (கேப்டன்), சரித் அசலன்கா (துணை கேப்டன்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னண்டோ, சதீரா சமரவிக்ரம, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷன், சஹான் ஆராச்சிகே, அகில தனஞ்சய, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்னே மற்றும் ஷெவோன் டேனியல்.

    • இலங்கை, ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கொழும்பு,

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார்.

    இலங்கை சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாளில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்திருந்தது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணரத்னே 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. திமுத் கருணரத்னே 77 ரன்னும் எடுத்தனர். மேத்யூஸ், சண்டிமால் ஜோடி சிறப்பாக விளையாடி சதமடித்தனர். மேத்யூஸ் 141 ரன்னும், சண்டிமால் 107 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 410 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இலங்கை 212 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் நவீத் சத்ரன், கைஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

    • இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.
    • முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது உடும்பு ஒன்று மைதானத்திற்கு நுழைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

    ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்களில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 212 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் போது உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்கு நுழைந்தது. இதனால் விளையாட்டு உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறி ஓடியது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது.

    மற்ற நாட்டு மைதானத்துக்குள் நாய், புறா வந்து பார்த்ததுண்டு. ஆனால் இலங்கையில் மட்டும் நாய், பாம்பு, உடும்பு மைதானத்துக்குள் வந்துள்ளது. இதற்கு முன் இலங்கை பீரிமியர் லீக் தொடரின் போது பாம்பு 2 முறை மைதானத்துக்குள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இலங்கை தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    கொழும்பு:

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஸ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி கொழும்புவில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி இலங்கை பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் ரஹ்மத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 62.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மத் 91 ரன்கள் அடித்தார். இலங்கை அணியில் அதிகபட்சமாக விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் அடித்துள்ளது. நிசன் மதுஷ்கா 36 ரன்களுடனும், திமுத் கருணாரத்னே 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • முதலில் ஆடிய இலங்கை 323 ரன்கள் குவித்தது.
    • குசால் மெண்டிஸ், கருணரத்னே அரை சதமடித்தனர்.

    அம்பாந்தோட்டை:

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 78 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே 52 ரன்னிலும் அவுட்டாகினர். சதீரா சமரவிக்ரமா 44 ரன்னும், நிசங்கா 43 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஷ்மதுல்லா ஷாகிடி 57 ரன்னிலும், இப்ராகிம் ஜட்ரன் அரைசதம் அடித்து 54 ரன்னிலும் அவுட்டாகினர். ரஹ்மத் ஷா 36 ரன்னில் வீழ்ந்தார்.

    அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம்ழக்க ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட் வீழ்த்தியும், 29 ரன்னும் எடுத்த தனஞ்செய டி சில்வா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது. வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 268 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    அம்பாந்தோட்டை:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

    இந்நிலையில், முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா பொறுப்புடன் ஆடி 91 ரன்கள் எடுத்தார். டி சில்வா 51 ரன்னும் எடுத்தார். நிசாங்கா 38 ரன் சேர்த்தார்.

    இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி 98 ரன்னில் அவுட்டானார். ரஹ்மத் ஷா 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹஸ்மத்துல்லா ஷாகிடி 38 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

    • முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார்.
    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். ர்

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 50 முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த போட்டியில் இலங்கை அணியில் இடம் பிடித்திருக்கும் பதிரனா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை டி20 அணியில் இடம்பிடித்தார். தற்போது சிஎஸ்கேவில் டெத் ஓவரில் கலக்கிய பதிரானா ஒரு நாள் தொடரில் அறிமுகமாகிறார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசி வரும் பதிரனா 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து உள்ளார். முதல் 3 ஓவரிலேயே 7 வைடு வீசினார். அதில் வைடு பந்தில் ஒரு பவுண்டரி சென்றது குறிப்பிடத்தக்கது.

    பதிரனா சென்னை அணிக்காக சிறப்பாக வீசினார். அதனால் சென்னை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து இவரின் அறிமுக ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என கூறலாம். இந்த போட்டியை பார்த்த ரசிகர்கள் சோகமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பலர் இன்னும் 6 ஓவர்கள் உள்ளது. அதில் மீண்டும் எழுவார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

    ×