search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறால் வளர்க்கும் திட்டம்"

    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 1 எண்ணம் இலக்கு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்புநி லையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன் ராஜ் ஆலிவர் வெளியிட்டு ள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கவும் மற்றும் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்த்தல் தொழிலில் ஈடுபட விரும்வோர் பயன்பெறும் வகையில் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்த்தலுக்கு உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேற்படி திட்டத்தில் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் இறால் வளர்க்கும் திட்டத்தில் 0.1 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த மூலதன செலவினம் ரூ. 10 லட்சத்தில் மகளிர் பிரிவிற்கு மட்டும் 60 சதவீதம் மானியமாக ரூ.6 இலட்சமும், உள்ளீட்டு மானியச் செலவினம் ரூ.8 லட்சத்தில் 60 சதவீதம் மானியமாக ரூ.4.80 லட்சமும் ஆக கூடுதல் ரூ.10.80 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 1 எண்ணம் இலக்கு மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.எனவே மேற்படி திட்டத்தில் பெறப்படும் விண்ணப்ப ங்கள் தகுதி மற்றும் மூப்புநி லையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, எண்.873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×