search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை உரம் தயாரிப்பு"

    • ஊராட்சிகளில் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.

    குடிமங்கலம் :

    மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் மண்புழு உரம் மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.முதற்கட்டமாக குடிமங்கலம் ஒன்றியத்தில் சில ஊராட்சிகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.கிராமங்க ளில், தூய்மை பணியாள ர்களால் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து மக்கும் கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.உற்பத்தியாகும் உரத்தை விற்பனை செய்து வருவாயை ஊராட்சி நிதியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது.இத்தகைய மண்புழு உரம் தயாரிப்புக்கு ஊராட்சிகளில் 90 ஆயிரம் ரூபாய் செலவில் 8 தொட்டிகளுடன் இயற்கை உரக்குடில் அமைக்கப்பட்டது.உரம் தயாரிப்பு மற்றும் உரக்குடில் பராமரிப்புக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆட்களும் நியமிக்கப்பட்டனர்.

    சில மாதங்கள் மட்டுமே இத்திட்டம் அனைத்து ஊரா ட்சிகளிலும் செயல்பாட்டில் இருந்தது. அதன்பின் குப்பையை தரம் பிரிப்பதில் தொய்வு ஏற்பட்டது.தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் இயற்கை உரக்குடில் காட்சிப்பொருளாகவும் சில இடங்களில் பராமரிப்பி ல்லாமல் மேற்கூரை, சுவர்கள் இடிந்தும் வருகின்றன.ஊராட்சி ஒன்றிய நிர்வாக ங்களின் அலட்சியத்தால் இத்திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. திட்டத்தை செயல்படுத்தாமல் கழிவுகளை ஆங்காங்கே குவித்து வைத்து தீ வைத்து எரிக்கப்படுகிறது.திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் கலெக்டர் கிராமங்களில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×