search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்குநர் ஆய்வு"

    • பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டட பணிகளை 3 மாதத்திற்குள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
    • ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பயோமைமிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் 2019-2020 நிதியாண்டில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 2.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டிகள், 2020-21 ஆம் நிதி ஆண்டில் மூலதனம் மானியத் திட்டத்தின் கீழ் 4.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டடப் பணிகள், 2022-23 நிதியாண்டில் 1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, 11.75 லட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்காவில் மக்கும் கழிவுகளை பிரிக்கும் பகுதிக்கு மேற்கூரை அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குர்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல் பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டட பணிகளை 3 மாதத்திற்குள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பயோமைமிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுகளின் போது நிர்வாகப் பொறியாளர்கள் கணேச மூர்த்தி, மகேந்திரன், உதவி நிர்வாகப் பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் பழனி, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் கீதா, துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏர்வாடி, சிக்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத்துறை இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் நடைபெற்று வரும் மலேரியா, டெங்கு ஒழிப்பு பணிகளை பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் இயக்குநர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தார். கடலோர கிராம பகுதிகளில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று தெளிப்பான்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

    கிணறுகளில் வளரும் கொசு புழுக்களை சாப்பிடும் கம்பூசியா என்ற ஒரு வகை மீன்களும், வீடுகள் மற்றும் பொதுக்கிணறுகளில் சுகாதாரத் துறை பணியாளர்களால் விடப்படுகிறது. இந்த பணிகள் நடைபெற்ற சின்ன ஏர்வாடி பகுதிகளில் பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் ஏர்வாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ ஆய்வகங்கள், பிரசவ அறை, பிரசவத்திற்கு பின்கவனிப்பு அறை, உள்நோயாளிகள் வார்டு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு மருத்துவ பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் தரமான சிகிச்சை கிடைக்கிறதா? என்றும் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது மருத்துவர்கள் அரவிந்தராஜ், இளையராஜா, வினோத்குமார், மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ், விருதுநகர் மண்டல பூச்சியியல் அலுவலர் கல்விக்கரசன், இளநிலை பூச்சியியல் வவ்லுநர்கள் கண்ணன், பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், பகுதி சுகாதார செவிலியர் கலா, சுகாதார ஆய்வாளர்கள் செல்ல துரை, சுப்பிரமணியன், கோவிந்தகுமார், இஜாஜ் அகமது, ஹரி கிருஷ்ணா, மருத்துவ ஆய்வக நுட்பனர்கள் வளர்மதி, முனியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • பல்வேறு திட்டப்பணிகள் குறித்து சோதனை
    • அனைவருக்கும் சரியான மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் ஒன்றியம், வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.செந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்று வந்த மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை வீடுவீடாக சென்று பார்வையிட்டார். அனைவருக்கும் சரியான மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச. பசுபதி, வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். சங்கீதா மற்றும் நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • விதைச்சான்று இயக்குநர் ஆய்வு செய்தார்.
    • விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா, விதை சான்று அலுவலர் வீரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று இயக்குநர் வளர்மதி பரமக்குடி பகுதியில் உள்ள உரம் மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார். பஸ் நிலையம் அருகே உள்ள கே.எஸ்.ஆர். உரம் மற்றும் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வின் போது, ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, விதையின் தரம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பதை சரி பார்த்தார். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரம் மற்றும் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து, உச்சிப்புளி வட்டாரத்தில் இயங்கி வரும் அரசு தென்னங்கன்று பண்ணையை பார்வையிட்டு விற்பனைக்கு தயாராக உள்ள தென்னங்கன்றுகளின் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விதை ஆய்வு துணை இயக்குநர் துரைகண்ணம்மாள், விதைச்சான்று உதவி இயக்குனர்கள் சிவகாமி, துரைசாமி, திருப்புல்லாணி வட்டார உதவி இயக்குநர் அமர்ரால், விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா, விதை சான்று அலுவலர் வீரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    • விதைப்பரிசோதனை நிலையத்தில் இயக்குநர் ஆய்வு செய்தார்
    • 118 விதை மாதிரிகள் தரமற்றவை

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் சென்னை விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குநர் வளர்மதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பெரம்பலூரில் உள்ள விதைப்பரிசோதனை நிலையத்தில் திடிரென சென்னை விதைச்சான்று, அங்ககச்சான்று இயக்குநர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள், பணி விதை மாதிரிகள் ஆகியவையின் தரம், முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை, பிற ரக கலவன் ஆகியவை கணக்கிடப்படும் முறை மற்றும் பரிசோதனை முடிவுகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் விதை முளைப்புத்திறன் அறையில் முளைப்புத்திறன், கணக்கிடும் முறைகள் மற்றும் மறு பரிசோதனை மாதிரிகள் குறித்தும், விதை பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். விதை மாதிரிகளை சரியான முறையில் பகுப்பாய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் முடிவுகள் கிடைக்க செய்யுமாறு இயக்குநர் அறிவுறுத்தினார்.

    பெரம்பலூர் விதைப் பரிசோதனை நிலையத்தில் நடப்பாண்டு இதுவரை 492 சான்று விதை மாதிரிகள், ஆயிரத்து 21 ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் 273 பணி விதை மாதிரிகள் என மொத்தம் ஆயிரத்து 776 விதை மாதிரிகள் பகுப்பாய்வு செய்து முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 118 விதை மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன என்று திருச்சி விதைப்பரிசோதனை அலுவலர் மனோன்மணி தெரிவித்தார்.

    ஆய்வின்போது, கரூர் விதை ஆய்வு துணை இயக்குநர் மாயக்கண்ணன், பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×