search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்ட பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு
    X

    பென்னாகரம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குர்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    திட்ட பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு

    • பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டட பணிகளை 3 மாதத்திற்குள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
    • ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பயோமைமிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் 2019-2020 நிதியாண்டில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 2.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டிகள், 2020-21 ஆம் நிதி ஆண்டில் மூலதனம் மானியத் திட்டத்தின் கீழ் 4.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டடப் பணிகள், 2022-23 நிதியாண்டில் 1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, 11.75 லட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்காவில் மக்கும் கழிவுகளை பிரிக்கும் பகுதிக்கு மேற்கூரை அமைக்கும் பணி உள்ளிட்ட திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குர்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதேபோல் பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டட பணிகளை 3 மாதத்திற்குள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பயோமைமிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுகளின் போது நிர்வாகப் பொறியாளர்கள் கணேச மூர்த்தி, மகேந்திரன், உதவி நிர்வாகப் பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் பழனி, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் கீதா, துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×