search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்று இரவு சூரசம்ஹாரம்"

    • மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா நிகழ்ச்சி நடக்கும்.
    • நாளை திருக்கல்யாண விழா நடைபெறும்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மீது அமைந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா வருடந்ததோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா கடந்த 14-ந் தேதி காலை தொடங்கியது.

    அன்று காலை 8 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் இருந்து முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உற்சவமூர்த்தி புறப்பாடு தொடங்கி மலை கோவிலை அடைந்தது அதன் பிறகு யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியும், உற்சவர் மற்றும் மூலவர் ஆபிஷேகம் நடைபெற்றது.

    தொடந்து பகல் 12 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல் 12.30 மணிக்கு வள்ளி தெய்வானைக்கு அபிஷேம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் தொடந்து இன்று மதியம் வரை 5 நாட்களும் தினசரி இதே நேரத்தில் நடந்தது. அதன் பின்பு இன்று மதியம் 2 மணிக்கு மலை கோவிலில் சூரனை வதம் செய்வதற்காக சக்தி வேல் வாங்கும் வைபோகம் நடக்கிறது.

    இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநா தசிவ ச்சாரியார் முருகப்பெரு மானிடம் சிறப்பு பூஜைகள் செய்து சக்தி வேல்லினை ஒப்படைப்பார்.

    அதை தொடர்ந்து சாமி புறப்பாடு தொடங்கி படி வழியாக இரவு முருகப்பெருமான் சமேதராக மலை அடிவாரத்தில் எழுந்தருளி இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை மற்றும் சிறப்பு மேளதாளத்துடன் சூரனைவதம் செய்யும் சூரசம்ஹார விழா நிகழ்ச்சி நடக்கும்.

    சென்னிமலை டவுன், நான்கு ராஜா வீதிகளில் நடைபெற்ற இந்த சூரன்வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்சியை ஆயிரக்கா ணக்கான பக்தர்கள் பயபத்தி யுடன் கண்டுகளிப்பர்.

    அதன் பின்பு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளுவார். அதை தொடந்து நாளை காலை 10:30 மணிக்கு முருகப்பெ ருமான் தெய்வானையை மணம் செய்யும் திருக்க ல்யாண விழா நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன், தலைமையில், கமிட்டியினர் மற்றும் முருகபக்தர்கள் செய்து வருகின்றனர்.

    ×