search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இனவிருத்தி"

    • மீன்கள் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி: தடை காலத்துக்கு பின் கடலுக்கு சென்றனர் மீன்கள் வரத்து குறைவால் மீனவர்கள் ஏமாற்றம்
    • மீன்பிடி தடைகாலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக் கிழமையாகும். எனவே அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று ஆவலோடு விசை படகுகளில் மீனவர்கள் சென்றனர்.

    கடலூர்:

    வங்ககடலில் மீன் வளத்தை பெருக்கும் வகையில் ஏப்ரல் 15 முதல், ஜூன்.14-ந் தேதிவரை கடலில் மீன்பிடிக்க ஆண்டுதோறும் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை காலத்தில் மீன்கள் இனவிருத்தி செய்யும் என்ற நோக்கில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    எனவே இந்த தடைகாலத்தில் பைபர் மற்றும் கட்டுமர படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர். ஆழ்கடலில் மீன் பிடிக்ககூடிய விசை படகுகள் துைறமுக பகுதியில் ஓய்வு எடுத்தது. மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    எனவே கடந்த 15-ந் தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சுபஉப்பலவாடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.

    மீன்பிடி தடைகாலம் முடிந்து இன்று முதல் ஞாயிற்றுக் கிழமையாகும். எனவே அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என்று ஆவலோடு விசை படகுகளில் மீனவர்கள் சென்றனர். ஆனால் குறைந்த அளவு மீன்களே கிடைத்ததல் மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    மீன்கள் வரத்து குறைவு காரணமாக கடலூர் துறை முகத்தில் மீன்கள் விலை அதிகமாக இருந்தது. குறிப்பாக 1 கிலே வஞ்சரம் மீன் ரூ.700 ல் இருந்து 1000 மாகவும், சங்கராமீன் ரூ.200-ல் இருந்து ரூ.400 ஆகவும், பாறை மீன் ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆக இருந்தது.

    மீன்பிடி தடைகாலத்தில் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இன்று மீன்கள் வந்ததால் ஓரளவு விலை குறைவாக இருக்கும் என்று கருதி கடலூர் மக்கள் கடலோர பகுதிக்கு சென்றனர். ஆனால் மீன்கள் விலை உயர்வால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    ×