search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து பண்டிகைகள்"

    • பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் அதிகரிப்பு.
    • விடுமுறை நாட்கள் ஒரு சமூகத்திற்கு மட்டும் ஆதாரவாக உள்ளது.

    பீகார் மாநில அரசு சார்பில் 2024 ஆண்டுக்கான பள்ளி விடுமுறை நாட்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அடுத்த ஆண்டு அரசு பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் விரிவாக இடம்பெற்று இருக்கின்றன.

    அரசு வெளியிட்ட பட்டியலின் படி இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் பள்ளி விடுமுறை நாட்கள் பட்டியல் முஸ்லீம் சமூகத்திற்கு மட்டும் ஆதாரவான ஒன்றாக இருக்கிறது என பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ஏன் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கும் மத்திய மந்திரி அஸ்வினி சௌபே, இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அவற்றை முஸ்லீம் பண்டிகைக்கான விடுமுறையில் பீகார் அரசு ஈடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    "ஒருபக்கம், முஸ்லீம் பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளன. இந்து பண்டிகைகளுக்கான விடுமுறை நாட்கள் நீக்கப்பட்டுள்ளன," என்று இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பீகார் அரசு சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் 2024 விடுமுறை நாட்களுக்கான பட்டியலில் இந்து பண்டிகைகளான மகா சிவராத்திரி, ஜன்மாஷ்டமி, ரக்ஷா பந்தன் மற்றும் தீஜ் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு தீஜ் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×