search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இத்தாலி அரசு"

    இத்தாலி நாட்டில் கடந்த 1994ம் ஆண்டு இறந்த இலங்கையைச் சேர்ந்த தமிழரின் சடலம் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.#Srilankamandead
    கொழும்பு:

    இலங்கையில் உள்ள சாவகச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(49). இவர் கடந்த 1983ம் ஆண்டு வேலை செய்வதற்காக இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு பணிப்புரிந்த அவர்,  1994ம் ஆண்டு மே மாதம் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். இலங்கையில் அந்த சமயம் போர் தீவிரமாகியிருந்தது.

    இதனால் ஸ்டீபனின் சடலத்தை தாய்நாட்டிற்கு எடுத்து வர இயலவில்லை. இதையடுத்து  அங்கிருந்த அவரது உறவினர்கள் இத்தாலி அரசிடம், இலங்கையில் நடைபெற்றுவரும் போர் குறித்து எடுத்துக்கூறி அங்கேயே பதப்படுத்தி வைக்க அனுமதி பெற்றனர்.

    இந்த தகவலை, இலங்கையில் போர் சூழல் சற்றும் குறையாததால் ஸ்டீபனின் குடும்பத்தினருக்கு கூறவில்லை. கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. குடும்பத்தினருக்கு இது குறித்து தெரியப்படுத்தினர்.



    அப்போது ஸ்டீபனின் குடும்பத்தினர்  பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தனர். இதனால் ஏற்படும் சட்ட சிக்கல்களை சமாளிக்க முடியாததால் உடனடியாக இலங்கைக்கு கொண்டு வர இயலவில்லை.

    இந்நிலையில் ஸ்டீபன் இறந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று முன் தினம் சாவகச்சேரிக்கு அவரது சடலம் கொண்டு வரப்பட்டது. உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் சாவகச்சேரியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை இத்தாலி அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். #Italygovt
    ரோம்:

    ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே அந்த நாடுகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றன.

    ஐரோப்பிய நாடுகளிலேயே இத்தாலியில் தான் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருக்கிறது. கடந்த ஆண்டு அந்த நாட்டில் 4 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன.

    குழந்தை பிறப்பு குறைவாக இருப்பதால் அங்கு குழந்தைகள், இளைஞர்களை விட முதியவர்களே அதிகமாக உள்ளனர்.

    அந்த நாட்டில் பல ஆண்-பெண்கள் ஒன்று சேர்ந்து குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வது இல்லை. இதனால் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவது இல்லை. இது தான் குழந்தை பிறப்பு குறைவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    மேலும், தம்பதியினருக்கும் குழந்தை பிறப்பதும் குறைவாகவே இருக்கிறது. ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாமலும் பலர் குழந்தை பிறப்பை நிறுத்தி விடுகிறார்கள்.

    எனவே குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டங்களை அரசு உருவாக்க உள்ளது. அதன்படி 3-வது குழந்தை பெற்றால் அவர்களுக்கு இலவசமாக விவசாய நிலம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.



    குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கும். இத்தாலியில் 12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அரசுக்கு சொந்தமாக உள்ளன. இவற்றை 3-வது குழந்தை பெற்றவர்களுக்கு வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

    இதுசம்பந்தமான அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் வெளியிடப்பட இருக்கிறது. இதை எப்படி அமல்படுத்தலாம் என்பது பற்றி தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். #Italygovt
    ×