search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றுக்கால் பகவதி அம்மன்"

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவின் நிறைவாக அம்மன் பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட யானையில் பவனியாக கொண்டுவரப்பட்ட அம்மனை பக்தர்கள் வழிநெடுக மலர் தூவி வரவேற்றனர்.
    திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 12- ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பெண்கள் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பொங்கலிட்டு வழிபட்டனர்.

    தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அம்மன் பவனி ஆற்றுக்கால் கோவிலில் இருந்து மணக்காடு அய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்டது. அய்யப்பன் கோவிலில் இரவு ஓய்வுக்கு பிறகு மீண்டும் அம்மன் பவனி நேற்று காலை 8 மணிக்கு அய்யப்பன் கோவிலில் இருந்து புறப்பட்டது.

    அலங்கரிக்கப்பட்ட யானையில் அம்மன் ஊர்வலமாக ஆற்றுக்கால் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டார். வழிநெடுகே பக்தர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். வீடுகளின் முற்றத்தில் தேங்காய் பழத்தட்டுடன், குத்துவிளக்கு ஏற்றி ஆண்களும் பெண்களும் பக்தி பரவசத்துடன் அம்மன் பவனிக்கு வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் மலர் தூவி வரவேற்றனர். மதியம் 12 மணிக்கு பவனி கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து உச்ச பூஜை, தீபாராதனை, உச்ச ஸ்ரீபலி ஆகியன நடந்தது.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டனர். குத்தியோட்ட சிறுவர்கள், தாலப்பொலி நேர்ச்சை சிறுமிகள் இறுதி நேர்ச்சைக்காக கோவிலுக்குள் அழைத்து வரப்பட்டனர். இரவு 9.15 மணிக்கு அம்மனுக்கு காப்பு அவிழ்ப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 12.15 மணிக்கு நடைபெற்ற குருதி தர்ப்பணத்துடன் பொங்கல் விழா நிறைவடைந்தது.
    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்காலை திருவிழாவை முன்னிட்டு இன்று லட்சக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபாடு செய்தனர்.
    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்காலை திருவிழா உலக புகழ்பெற்றது.

    இந்த கோவிலில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். இந்த பொங்காலை விழாவில் லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பெண் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஒரே இடத்தில் அதிக பெண்கள் திரண்டு பொங்கல் வழிபாடு நடத்திய வகையில் இந்த பொங்காலை திருவிழா 2 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை முக்கிய நிகழ்ச்சியான பொங் காலை திருவிழா நடந்தது.

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் முன்பு உள்ள பெரிய பண்டார அடுப்பில் முதலில் தீ மூட்டப்பட்டது. காலை 10.15 மணிக்கு கோவில் தந்திரி வாசுதேவன் நம்பூதிரி பண்டார அடுப்பில் தீ வைத்ததும் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த அடுப்பில் பெண் பக்தர்கள் தீ மூட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.

    திருவனந்தபுரம் நகரின் முக்கிய வீதிகளில் ஏற்கனவே பொங்கல் அடுப்புகளுடன் இடம்பிடித்து இருந்த லட்சக்கணக்கான பெண் பக்தர்களும் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபட்டனர்.

    பொங்காலை திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பெண் கமாண்டோ போலீசாரும், பெண் போலீசாரும் கோவில் வளாகத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நாளை பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம், பிப். 19-

    திருவனந்தபுரம் ஆற்றுக் கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் களில் ஒன்றாக திகழ்கிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்காலை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பொங்காலை திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை நடிகர் மம்முட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழா நடந்து வருகிறது.

    கேரளா மட்டுமின்றி குமரி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய் வதால் அங்கு கூட்டம் அலை மோதுகிறது. பல மணிநேரம் காத்திருந்த பிறகே பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய முடிகிறது.

    இங்கு நடைபெறும் பொங்காலை திருவிழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப் படுகிறது. பிரசித்திபெற்ற பொங்காலை திருவிழா நாளை (20-ந்தேதி) நடை பெறுகிறது.

    நாளை காலை 10.20 மணிக்கு கோவில் வளாகத் தில் உள்ள அடுப்பில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன், மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோர் தீ பற்றவைப்பார்கள். அதை தொடர்ந்து கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் லட்சக் கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவார்கள்.

    இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றுப் பகுதியில் இப்போதே பக்தர் கள் இடம்பிடிக்க தொடங்கி விட்டனர். பொங்கல் அடுப்பு, பானை மற்றும் பூஜை பொருட்களுடன் அவர்கள் பொங்காலைக்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே இங்கு நடைபெற்று உள்ள பொங் காலை திருவிழா கின்னஸ் சாதனை புத்த கத்தில் இடம் பெற்று உள்ளது. எனவே நாளை பொங்காலை திருவிழாவில் பல லட்சம் பெண் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவனந் தபுரத்திற்கு சிறப்பு ரெயில், பஸ்கள் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. * * * ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வைக்க பானைகளை வாங்கிச் செல்லும் பெண் பக்தர்கள்.

    ×