search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறுமுகர் சன்னதி"

    • ஆறுமுகங்களையும் ஆறு திருக்கரங்களையும் உடையவர்.
    • இவரை திருக்கோவிலின் பிரதான வாயிலில் இருந்தே தரிசித்து அருளை பெறலாம்.

    இந்த சன்னதி ஆலயத்தின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஆறுமுகர், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் எழுந்தருளி, தம்பதி சமேதராய் அருள்பாளிக்கிறார்.

    ஆறுமுகங்களையும் ஆறு திருக்கரங்களையும் உடையவர்.

    வலக்கரங்களில் ஒன்று அபய முத்திரையை காட்ட மற்றவற்றில் வேலும், கத்தியும் அமைந்துள்ளது.

    இடக்கையில் கலிசதையும் கேடயத்தையும் கொண்டு மயில் மேல் அமர்ந்த நிலையில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார்.

    இவரை திருக்கோவிலின் பிரதான வாயிலில் இருந்தே தரிசித்து அருளை பெறலாம்.

    ஒவ்வொரு மாதமும், கிருத்திகை, விசாகம் மற்றம் சஷ்டி பவருங்களில் முருகப்பெருமானுக்கு அபிஷேகமும், ஆராதனையும்,மூலவருக்கு நடைபெற்று அதனை தொடர்ந்து

    ஆறுமுகர், சமேத வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகள் வாத்யங்களுடன், திருக்கோவிலின் உள் பிரகாரத்தை வலம் வருவர்.

    வழிக்கு துணை ஸ்ரீ ஆறுமுகர்

    "வழிக்கு துணை திருமென் மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு எசய்த பழிக்கு துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி வழிக்கு துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே"

    (இப்பாடலை வெளியே செல்லும்போது கூறினால் வழித்துணையாக ஸ்ரீஆறுமுகர் வருவார்).


    ×