search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரம்பப்பள்ளி ஆசிரியர்"

    • தொடக்க கல்வித்துறையில் விதிகளுக்கு புறம்பாக நிர்வாக மாறுதல்
    • ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான கோர்ட்டு வழக்குகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்க கூடாது

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு தொடக்கப்பள்ளி முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் ஒளிவு மறைவற்ற பொது மாறுதல் நடைபெறும் என்று அறிவித்து விட்டு தொடக்க கல்வித்துறையில் விதிகளுக்கு புறம்பாக நிர்வாக மாறுதல் வழங்கப்படுவதை கண்டித்தும், தொடக்கக்கல்வி துறையில் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளை ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான கோர்ட்டு வழக்குகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஜெசி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் எட்வின் பிரகாஷ், மாநில துணை தலைவர் சேவியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தை முன்பு போல் பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடமாக மாற்ற வேண்டும்.
    • ஆசிரியர்களின் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறுவதில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் உட்பட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும். பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தை முன்பு போல் பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடமாக மாற்ற வேண்டும். தொடக்கக் கல்வித்துறை முன்பு போல் தனித்துவத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முதல் வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றைத் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வழங்கிட வேண்டும்.

    ஆசிரியர்களின் உயர் கல்விக்கான பின்னேற்பு அனுமதி உடனடியாக அளிக்கப்பட வேண்டும், ஆசிரியர்களின் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறுவதில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும்.

    மாநிலம் முழுவதும் விதிகளுக்குப் புறம்பாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல்களை ரத்துச் செய்திட வேண்டும், தொடக்கக்கல்வி இயக்குநர் மட்டத்தில் அளிக்கப்பட்டு உள்ள மனுக்களின் மீது உரிய தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்களில் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் வரும் ஜூலை 14 முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் காத்திருப்புப் போராட்டம் நடத்த மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் உள்ள சங்கங்களுடன் இணைந்து வரும் ஜூன் மாதத்தில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதெனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை:

    தேசத்தின் எதிர்காலக் கல்வியைச் சீரழிக்கும் தேசியக் கல்விக்கொள்கையை திரும்பப்பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை திரும்பத் தர வேண்டும், ஊக்க ஊதியம், சரண்டர், டிஏ போன்ற பறிக்கப்பட்ட சலுகைகளை உடன் வழங்கிட வேண்டும், ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் இஎம்ஐஎஸ் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பழனியாண்டி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ராமகிருஷ்ணன் துவக்கவுரையற்றினார். மாவட்ட துணைச் செயலாளர்அழகு, கல்வி மாவட்ட செயலாளர் புவியரசு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நிர்வாகிகள் மணிக்குமார், தேவகுமார், மகாலிங்கம், மீனாட்சி , காத்தாயி, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×