நாகர்கோவிலில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தொடக்க கல்வித்துறையில் விதிகளுக்கு புறம்பாக நிர்வாக மாறுதல்ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான கோர்ட்டு வழக்குகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்க கூடாது
நாகர்கோவிலில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

நாகர்கோவில் :

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு தொடக்கப்பள்ளி முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் ஒளிவு மறைவற்ற பொது மாறுதல் நடைபெறும் என்று அறிவித்து விட்டு தொடக்க கல்வித்துறையில் விதிகளுக்கு புறம்பாக நிர்வாக மாறுதல் வழங்கப்படுவதை கண்டித்தும், தொடக்கக்கல்வி துறையில் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுகளை ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான கோர்ட்டு வழக்குகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஜெசி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் எட்வின் பிரகாஷ், மாநில துணை தலைவர் சேவியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com