search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் அலர்ட் மெசேஜ்"

    • மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அலர்ட் மெசேஜ்
    • ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

    எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.பி.க்களின் டெலிபோன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பது ஒன்றும் புதிதல்ல. இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலமாக ஒட்டு கேட்கப்பட்டதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு இந்திய அரசில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில்தான் "அரசின் ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள், ஆப்பிள் ஐடியுடன் இணைக்கப்பட்ட உங்கள் ஐபோனை ரிமோட் மூலம் ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. இது தவறான அலர்ட் ஆகக்கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருங்கள்" என எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், பவன் கேரா, கே.சி. வேணுகோபால், சுரியா ஸ்ரீநாத், டி.எஸ். சிங்டியோ, பூபிந்தர் சிங் ஹூடா, திரணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா,

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா உள்ளிட்ட எம்.பி.க்கள் பலருக்கு அலர்ட் மெசேஜ் வந்திருந்தது.

    இதையடுத்து மத்திய பா.ஜனதா அரசு தங்களை உளவு பார்த்து ஒட்டு கேட்க முயற்சிப்பதாகவும், செல்போன் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் "இந்த பிரச்சனையில் மத்திய அரசு அக்கறையோடு செயல்படுகிறது. விசாரணை நடத்த உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஆப்பிள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது" என்றார்.

    இந்த நிலையில் இந்தியாவின் கணினி எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT) விசாரணையை தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைக்கும் என தொழில்நுட்பத்துறை செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதுபோன்று ஆப்பிள் எதிர்க்கட்சிகளுக்கு அலர்ட் மெசேஜ் கொடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.

    ×