search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கன் பெண்கள்"

    • ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை தலிபான் விதித்துள்ளது.
    • இந்தத் தடையை தலிபான்கள் நீக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.

    நியூயார்க்:

    ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசுகையில், கல்வி பயில கொடுமைப்படுத்தும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது.

    குறிப்பாக, ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி நாளின் கருப்பொருள், கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள் என்பதே ஆகும் என தெரிவித்தார். 

    • ஆப்கானிஸ்தானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் செல்ல அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

    கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை, வேலைக்கு செல்ல தடை என பல்வேறு கட்டுப்பாடுகளால் பெண்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்து வந்தாலும் தலிபான்கள் அதனை பொருட்படுத்துவதாக இல்லை.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பொது விவகாரங்கள் மற்றும் தலிபான் புகார்களைக் கேட்கும் இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில், பெண்கள் இனி ஆண் டாக்டர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் டாக்டர்களிடம் மட்டுமே சிகிச்சை பெறவேண்டும். மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஆஸ்பத்திரியும் இதனை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    ×