search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரேட்டர்"

    • அரசு கேபிள் இணைப்புகள் இருந்த நிலையில் அவை துண்டிக்கப்பட்டு தனியார் கேபிள் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
    • அரசின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறிவொளி நகர் மற்றும் ஆறு முத்தாம்பாளையம் பகுதியில் அரசின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.ஏற்கனவே இப்பகுதியில் அரசு கேபிள் இணைப்புகள் இருந்த நிலையில் அவை துண்டிக்கப்பட்டு தற்போது தனியார் கேபிள் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

    இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அரசு கேபிள் பதிக்க மறுப்பு தெரிவிப்பதோடு உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

    ×