search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனித்திருவிழா"

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழா நடக்கவில்லை.
    • தேரோடும் வீதியில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

    தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி. இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குங்கும காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழா நடக்கவில்லை. இந்நிலையில் இந்தாண்டிற்கான விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று வந்தது.

    9-ம் திருநாளான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் குங்கும காளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் மாலை 4.45 மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க தேர் இழுக்கப்பட்டு ரத வீதிகள் வழியாக வலம் வந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    மாலை 6.46 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. முன்னதாக தேரோடும் வீதியில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. சிவகங்கை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ்(தேவகோட்டை), ஆத்மநாபன் (திருப்பத்தூர்) ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இந்த திருவிழா அடுத்த மாதம் 8-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
    • 8-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

    திண்டுக்கல் மலையடிவாரம் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று கோவிலில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி காலை 7 மணி அளவில் மூலவர் சுவாமி சீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உட்பட 16 வகையான சிறப்பு திருமஞ்சனம், ராஜ அலங்காரம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கோவில் கொடிமரத்தின் முன்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், நவக்கிரக பூஜையும் நடந்தது. அதன்பிறகு 10.30 மணியளவில் கோவில் கொடிமரத்தில் கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட வெண்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் இரவு 7 மணி அளவில் அன்ன வாகனத்தில் சுவாமி ரத வீதிகள் வழியாக வலம் வருதல் நடைபெற்றது. இந்த திருவிழா அடுத்த மாதம் 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 13 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி அடுத்த மாதம் 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சுவாமி நாகல்நகர் புறப்பாடு, 3-ந்தேதி மாலை 6 மணி அளவில் திருக்கல்யாணம், 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருத்தேர் புறப்பாடு, 7-ந்தேதி தெப்ப உற்சவம், 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

    • 4-ந்தேதி காலை 11.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
    • 5-ம் தேதி மதியம் 3 மணிக்கு அழகியகூத்தர் திருவீதி உலா நடைபெறும்.

    நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தில் உள்ள செப்பறை அழகியகூத்தர் கோவில் சிவனாரின் பஞ்ச சபைகளில் தாமிரசபை திருத்தலம் ஆகும். மகா விஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி, மணப்படைவீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக்காட்சி கொடுத்த தலமாகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோவில் கொடிமரத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், பாராயணம், தீபாராதனை நடைபெறுகிறது. 7-ம் நாளான 2-ந்தேதி காலையில் உருகு சட்டசேவை நடைபெறுகிறது. அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு சிவப்பு சாத்தி சிறப்பு தீபாராதனைகளும் வழிபாடுகளும் நடைபெறும். 3-ந்தேதி காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும் நடைபெறுகின்றன.

    4-ந்தேதி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 5-ம் தேதி காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு நடன தீபாராதனை, மதியம் 3 மணிக்கு அழகியகூத்தர் திருவீதி உலா வரும் வைபவமும் நடைபெறும். தொடர்ந்து அழகியகூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.

    • ஜூலை 5-ந்தேதி காலையில் தீர்த்தவாரி அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
    • விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அதிகாலையில் கும்ப பூஜை, ஹோமம் நடைபெற்றது. பின்னர் கொடிப்பட்டம் திருவீதி உலா சென்று கோவிலை வந்தடைந்ததும், 5 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் மணியம் சுப்பையா, பக்த ஜன சபை செயலாளர் அரிகிருஷ்ணன், பொருளாளர் கற்பக விநாயகம், ஆறுமுகநேரி நகர் நல மன்ற தலைவர் பூபால்ராஜன், ஆறுமுகநேரி சைவ வேளாளர் சங்க தலைவர் சங்கரலிங்கம், தொழிலதிபர் தவமணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா, கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. 10-ம் திருநாளான ஜூலை மாதம் 5-ந் தேதி காலையில் சுவாமி-அம்பாள் சப்பரத்தில் திருவீதி உலா, தொடர்ந்து தீர்த்தவாரி அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதிஉலா ஆகியன நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை திருவாடுதுறை ஆதீனம் வைத்தியநாத தம்பிரான் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×